சீனவில் கடந்த 2019-ம் ஆண்டில் உருவெடுத்த கொரோனா வைரஸ் உலக முழுதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் இந்த தொற்றின் தாக்கம் தற்போது தான் குறைந்து வரும் நிலையில், சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று உருவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது என்றும், நேற்று முன்தினம் மட்டும் 3,400 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சீனாவின் ஜில்லின் நகரில் 6 ஆயிரம் பேர் தங்கி சிகிச்சை பெற வசதியாக மிகவும் பிரமாண்டமான மருத்துவமனையை 6 நாளில் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது என ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக இடம் மாற்றும் வசதி கொண்ட 3 மருத்துவமனைகள் ஏற்கெனவே தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் நோயாளிகள் அதிகம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இத்தொற்று இந்தியாவிலும் பரவும் அபாயம் இருப்பதால் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது.
சீனாவில் புதிய வகை வைரஸ் உருவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். அவை இணையவாசிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அவற்றில் சில வைரல் மீம்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
சீனாவின் புதிய வகை வைரஸ் வைரல் மீம்ஸ்:
சீனாவில் பரவி வரும் இந்த புதிய வகை வைரஸ் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது போல் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
சீனாவின் புதிய வகை வைரஸ் ட்ரெண்டிங் மீம்ஸ்:
சீனாவில் பரவி வரும் இந்த புதிய வகை வைரஸ் கொரோனா வைரஸ் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது போல் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சில:
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.