பும்ராவின் ஜெராக்ஸாக முயற்சிக்கும் நியூஸிலாந்து சிறுவன்; வைரல் வீடியோ
நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், அப்படியே பும்ராவைப் போல பந்து வீசுகிறான். பும்ராவை ஜெராக்ஸ் எடுத்ததைப் போல ஓடிவந்து பந்து வீசுகிறான். அந்தச் சிறுவன் வலை பயிற்சியில் ஈடுபடும் பேட்ஸ்மேன் ஒருவருக்கு பந்து வீசும்போது எடுக்கப்பட்ட வீடியோவை நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ரீ…
By: WebDesk
Updated: February 10, 2020, 09:38:56 PM
New Zealand boy bowling like jaspirt bumrah, பும்ரா போல பந்து வீசும் நியூஸிலாந்து சிறுவன், வைரல் வீடியோ, New Zealand boy imitate jaspirt bumrah, indian fast bowler jasprit bumrah, viral video, new zealand boy bowling viral video
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைப் போல நியூஸிலாந்து சிறுவன் ஒருவன் பந்துவீசி பயிற்சி செய்யும் வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிரணியின் பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்து வருகிறார். அவர் பந்து வீசும் முறையே மிகவும் வித்தியாசமானது.
பொதுவாக வேகப்பந்து வீச்சாளர் என்றால் நீண்ட தூரத்தில் இருந்து வேகமாக ஓடிவந்து பந்து வீசுவார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பவுண்டரி எல்லையில் இருந்து பந்துவீச ஓடிவருவார். ஆனால், பும்ரா அப்படி இல்லை. மிகவும் அருகே இருந்து ஓடிவருவார். அதை ஓடிவருகிறார் என்றுகூட சொல்ல முடியாது ஏதோ நடனம் ஆடி வருகிறார் என்றே சொல்லத் தோண்றும். ஏனென்றால், அவர் ஓடிவருவது நின்று நின்று துள்ளித்துள்ளி ஓடிவருவது போல இருக்கும். ஆனால், அவர் கையில் இருந்து பந்து புறப்படும்போது அசுர வேகத்தில் செல்லும். இதனால், பேட்ஸ்மேன்கள் அவருடைய வேகத்தையும் சுழலையும் பந்தின் ஸ்விங்கையும் கணிக்க முடியாது திணறிவருகிறார்கள்.
இந்த நிலையில், நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் அப்படியே பும்ராவைப் போல பந்து வீசுகிறான். பும்ராவை ஜெராக்ஸ் எடுத்ததைப் போல ஓடிவந்து பந்து வீசுகிறான். அந்தச் சிறுவன் வலை பயிற்சியில் ஈடுபடும் பேட்ஸ்மேன் ஒருவருக்கு பந்து வீசும்போது எடுக்கப்பட்ட வீடியோவை நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ரீ டுவிட் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகிவருகிறது.