கோவையில் திருமணம் முடிந்த பின்னர் புதுமண தம்பதி மாட்டு வண்டியில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று (நவ.19) முகூர்த்த நாள் என்பதால் கோவை ஈச்சனாரி கோவிலில் இளம் ஜோடிகள் பலருக்கு திருமணம் நடைபெற்றது.
இதில் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், பௌதாரணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து புதுமண தம்பதி செட்டிபாளையத்தில் உள்ள ஆனந்த் வீட்டுக்கு, ஈச்சனாரி கோவிலில் இருந்து மாட்டுவண்டியில் பயணம் சென்றனர்.
/indian-express-tamil/media/media_files/RyDYxlsDC2rW38DTu6vq.jpeg)
மாட்டு வண்டியில் சென்ற புதுமண தம்பதியரை, சாலையில் சென்றவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“