நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த நெடுகுளா ஒசட்டி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது. அந்த சிறுத்தை சி.சி டிவி கேமிராவில் சிக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த நெடுகுளா ஒசட்டி அமைந்துள்ளது. அங்கு கடந்த ஒரு வார காலமாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது. ஒரு வாரமாக ஒரே பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
சிறுத்தை நடமாட்டம், அப்பகுதியில் உள்ள ஒருவரது வீட்டின் பொருத்தப்பட்டுள்ள சி.சி டிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
நெடுகுளாவை சுற்றி ஐந்து கிராமங்கள் மற்றும் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பள்ளி மருத்துவமனை அமைந்துள்ளது.
இரவு மட்டும் இன்றி பகல் நேரங்களிலும் இந்த சிறுத்தை சுற்றி திரிவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் வேதனை தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"