New Update
/
நீலகிரியில் முக்கூர்த்தி தேசிய பூங்காவில் சோகத்துடன் நிற்கும் இரண்டு வரையாடுகள் வீடியோவை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நீலகிரி வரையாடுகளின் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டின் மாநில வனவிலங்கான நீலகிரி வரையாடுகள் அழிந்து வரும் நிலையில் அவற்றை பாதுகாப்பதற்காக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
If innocence had a face it would be of these two Nilgiri Tahr fawns.. precious
— Supriya Sahu IAS (@supriyasahuias) April 24, 2024
Nilgiris grasslands-video SS #ProjectNilgiriTahr #NilgiriTahr #TNForest #fieldvisit pic.twitter.com/7ZscWUWz1G
இந்த நிலையில், நீலகிரியில் முக்கூர்த்தி தேசிய பூங்காவில் சோகத்துடன் நிற்கும் இரண்டு வரையாடுகளின் வீடியோவை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்து சுப்ரியா சாகு குறிப்பிடுகையில், “அப்பாவி தனத்திற்கு ஒரு முகம் இருந்தால் அது இந்த இரண்டு உரையாடுகள் தான் என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
அண்மையில், நீலகிரி முக்கூர்த்தி பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த வரையாடுகள் மந்தையை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மூக்கூர்த்தி தேசிய பூங்காவில் உள்ள 31 வரையாடுகளைப் பார்வையிட்ட சுப்ரியா சாகு, வரையாடுகளின் முக்கியத்துவம் குறித்தும், தமிழக அரசு வரையாடுகளை அழிவில் இருந்து மீட்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிவிட்டிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.