New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/03/slider-1-5.jpg)
nirmala sitharaman viral speech
நீங்களும் மிஸ் பண்ணாம பாருங்க.
nirmala sitharaman viral speech
nirmala sitharaman viral speech : கேரளாவில் நடைப்பெற்ற பிரச்சாரத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கேரள சேட்டன்கள் மத்தியில் ஒரே கைத்தட்டல் தான்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த தேர்தலில் ”வெற்றி பெற்று பாஜக-வை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் நோக்கம்” என்று காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதே போல், நாடாளுமன்றத்தில் ” மீண்டும் வெற்றி பெற்று எங்கள் ஆட்சியே தொடர வைப்போம் ” என்று பாஜவினர் - பிரச்சார பீரங்கிகளாக களத்தில் இறங்கியுள்ளனர். இந்த நேரத்தில் மாநிலங்களில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் கட்சி தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் தங்களது பேச்சு ஆற்றலை வெளிப்படுத்தும் விதம் ரசிக்கும் படியாக இருக்கும். குறிப்பாக எதிர்கட்சியினர் விமர்சிக்கும் வகையிலும் கூட்டத்தில் கைத்தட்டலை பெறும் வகையில் அவர்கள் பேசுவது தேர்தல் நேரத்தில் எப்போதுமே வைரல் தான்.
அந்த வகையில், இதுவரை தனது சீரியஸ் முகத்தை மட்டுமே காட்டிக் கொண்டிருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேரள சேட்டன்கள் மத்தியில் நக்கலாகவும்,கலாய்க்கும் வகையிலும் ரொம்பவும் இயல்பாக, அதும் தமிழிலேயே பேசி வீடியோ இணையத்தில் பரவி கொண்டிருக்கிறது.
அதிலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று எழுப்பிய ஆதரவு குரல்கள் அதற்கு ஆத்ரவு தெரிவித்த சில கட்சியினரை சுட்டிக்காட்டி பேசி அனைவரின் கைத்தட்டல்களையும் பெற்றுள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இதோ அவர் பேசிய வீடியோ நீங்களும் மிஸ் பண்ணாம பாருங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.