No Corona Corona No Ramdas Athawale new slogan for Covid19 : கொரோனா இந்தியாவில் பரவ ஆரம்பித்த சமயத்தில் கொரோனாவை ஒழிக்க கோ கொரோனா கோ என்று கோஷமிட்டு அனைவரின் கவனத்தையும் திருப்பியவர் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே. மும்பையில் இருக்கும் கேட்வே ஆஃப் இந்தியாவில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு முழங்கினார். தற்போது மீண்டும் அதே போன்ற மற்றொரு கோஷத்தை முன் வைத்து அதற்கு ஒரு அர்த்தத்தையும் கொடுத்துள்ளார்.
Earlier I gave the slogan ‘Go Corona, Corona Go’ and now corona is going. For the new coronavirus strain, I give the slogan of ‘No Corona, Corona No’: Union Minister Ramdas Athawale pic.twitter.com/ND2RQA7gAY
— ANI (@ANI) December 27, 2020
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், நான் முன்பு கோ கொரோனா, கொரோனா கோ என்றேன். தற்போது கொரோனா நோய் தாக்கம் குறைகிறது. தற்போது புதிய வடிவம் கொண்ட கொரோனா பரவி வருகிறது. இப்போது நான் நோ கொரோனா நோ கொரோனா என்கிறேன். கொரோனா இன்னும் சில நாட்களில் சென்றுவிடும் என்றார்.
கொரோனா வைரஸ் இன்னும் 6 அல்லது 7 மாதங்களுக்கு இருக்கலாம். ஆனால் அது ஒரு நாள் சென்று தான் ஆக வேண்டும். தடுப்பூசி வந்தவுடன் கொரோனா தொற்று மறைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil