/indian-express-tamil/media/media_files/2025/08/05/currency-2025-08-05-19-09-38.jpg)
சமூக வலைத்தளங்களில் சிலர் அந்தத் தொகையைக் கணக்கிட்டு, அது சுமார் ரூ.1,13,56,000 கோடி இருக்கலாம் என்று விவாதித்து வருகின்றனர். Photograph: (Represetative image)
அந்த வங்கி கணக்கில் காட்டிய தொகை 37 இலக்கங்களில் இருந்தது. அதாவது, 10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 இவ்வளவு தொகை இருப்பு உள்ளதாகக் காட்டியது. இதைக் கணக்கிட நாம் இந்திய முறையைப் பயன்படுத்தினால், அதுவே ஒரு தனி சவாலாக இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் சிலர் அந்தத் தொகையைக் கணக்கிட்டு, அது சுமார் ரூ.1,13,56,000 கோடி இருக்கலாம் என்று விவாதித்து வருகின்றனர். Photograph: (Represetative image)
நொய்டாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் தீபக், ஆகஸ்ட் 3-ஆம் தேதி இரவு ஒரு குறுஞ்செய்தியைப் பார்த்து ஸ்தம்பித்துப் போனார். தனது தாயார் மறைவுக்குப் பிறகு அவர் பயன்படுத்தி வந்த வங்கிக் கணக்கில், ஒரு கோடி அல்ல, இரண்டு கோடி அல்ல, கற்பனைக்கே எட்டாத ஒரு தொகை வரவு வைக்கப்பட்டிருந்தது! அந்த எண்ணிக்கை, நம் வழக்கமான கணக்குகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது.
அந்த வங்கி கணக்கில் காட்டிய தொகை 37 இலக்கங்களில் இருந்தது. அதாவது, 10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 இவ்வளவு தொகை இருப்பு உள்ளதாகக் காட்டியது. இதைக் கணக்கிட நாம் இந்திய முறையைப் பயன்படுத்தினால், அதுவே ஒரு தனி சவாலாக இருக்கும். சமூக வலைத்தளங்களில் சிலர் அந்தத் தொகையைக் கணக்கிட்டு, அது சுமார் ரூ.1,13,56,000 கோடி இருக்கலாம் என்று விவாதித்து வருகின்றனர். ஆனால், அந்த இளைஞன் கண்ட தொகை, அதைவிட மிகப் பெரியது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஒருவேளை அது ஒரு செப்டில்லியன் ட்ரில்லியன் இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
தனது வங்கிக் கணக்கில் இவ்வளவு பெரிய தொகையைப் பார்த்ததும் குழப்பமும் பீதியும் நிறைந்த தீபக், இந்தச் செய்தியைத் தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டார். அடுத்த நாள் காலை, நேரடியாக வங்கிக்குச் சென்று விசாரித்தார். அங்கே வங்கி அதிகாரிகளும் அந்தத் தொகையைப் பார்த்து அதிர்ந்துபோயினர். ஆனால், கணக்கில் வந்த தொகை எவ்வளவு பெரியது என்பதை உறுதி செய்த அவர்கள், கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாகவும், இதை வருமான வரித்துறை விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
नोएडा में 20 साल के दीपक के कोटक महिंद्रा बैंक खाते में 36 डिजिट की धनराशि आई है।
— Sachin Gupta (@SachinGuptaUP) August 4, 2025
ये रकम 1 अरब 13 लाख 56 हजार करोड़ रुपए बैठती है।
मेरा गणित थोड़ा कमजोर है। बाकी आप लोग गुणा-भाग कर सकते हैं।
फिलहाल इनकम टैक्स विभाग जांच कर रहा है। बैंक खाता फ्रीज कर दिया गया है। pic.twitter.com/cLnZdMKozD
இந்த வினோதமான செய்தியை முதன்முதலில் வெளியிட்ட செய்தியாளர் சச்சின் குப்தா, "என் கணக்கு கொஞ்சம் பலவீனமானது. மற்றவர்கள் பெருக்கல் மற்றும் வகுத்தலைச் செய்யலாம்" என்று பதிவிட்டு, இந்த விவகாரத்தின் நம்ப முடியாத தன்மையை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தினார். இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவி, தீபக் பிரபலமாகிவிட்டார். உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் என அனைவரும் அவருக்கு அழைப்புகளைக் குவித்து, விசாரித்த வண்ணம் இருந்தனர். இதனால், சமாளிக்க முடியாமல், தனது செல்போனை அவர் அணைத்துவிட்டார்.
இது ஒரு தொழில்நுட்பக் கோளாறா, அல்லது வங்கி அமைப்பில் ஏற்பட்ட ஏதேனும் பிழையா என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சிலர் இது பணமோசடி முயற்சிக்கான ஒரு வாய்ப்பாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். முழுமையான விசாரணைக்குப் பின்னரே உண்மை வெளிவரும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
கோடக் வங்கி விளக்கம்:
இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறிய நிலையில், கோடக் மஹிந்திரா வங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. “ஒரு வாடிக்கையாளரின் கணக்கில் அசாதாரணமான பெரிய இருப்பு இருப்பதாக வரும் ஊடக அறிக்கைகள் தவறானவை. வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு இருப்பை மொபைல் வங்கிச் செயலி அல்லது நெட் பேங்கிங் மூலம் சரிபார்க்கலாம். எங்கள் அமைப்புகள் அனைத்தும் பாதுகாப்பாகவும், சாதாரணமாகவும் செயல்பட்டு வருகின்றன என்பதை கோடக் மஹிந்திரா வங்கி உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளது.
மொத்தத்தில், நொய்டா இளைஞரின் வங்கிக் கணக்கில் வந்த அந்த 37 இலக்கத் தொகை, ஒரு தொழில்நுட்பக் கனவா அல்லது ஒரு தற்செயலான நிஜமா என்பதை அறிய நெட்டிசன்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.