மீண்டும் வந்தார் கிம் ஜாங் உன், வட கொரியாவின் ‘தி அண்டர்டேக்கர்’ எனப் புகழாரம்

Kim Jong-Un: தலைவரின் உடல் நிலை குறித்து தெரியாமல் நகைச்சுவை மீம்ஸ்களை போட்டு விட்டோம். மன்னிப்பு கேட்கும் விதமாக போட்ட மீம்ஸ்களை நீக்கி வருவதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

By: Updated: May 3, 2020, 11:39:24 AM

North Korean leader Kim Jong-Un makes public appearance : கடந்த 20 நாட்களுக்கு மேலாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலம் மோசமடைந்து விடடதாகவும், ஏன்…. மரணமடைந்துவிட்டதாகவும் செய்திகள் பரவி வந்தன. கிம் ஜாங் உன் உடல்நிலை உலக அரசியலிலும் பேசும் பெருளாகியது.

இந்நிலையில், அனைத்து புரளிகளுக்கும் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக, வட கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) வடக்கு பியோங்யாங் நகரில் கிம் ஜாங் உன் உரம் உற்பத்தி ஆலையை தொடங்கி வைக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளது.

கிம் ஜாங் உன்-ன் இந்த போட்டோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. கிம் ஜாங் உன் உடல் நிலை குறித்த நகைச்சுவை மீம்ஸ்களை தெரியாமல் போட்டு விட்டோம். தலைவரிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக போட்ட மீம்ஸ்களை நீக்கி வருவதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:North korean leader kim jong un made a public appearance188510

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X