New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/cats-7.jpg)
Ocean week 2021 Trending viral video of ocean creatures : ஜூன் 7 முதல் 13ம் தேதி வரை உலகில் இருக்கும் கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக உலக பெருங்கடல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் மாசு மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக பல்வேறு இழப்புகள் கடல் சூழலியலில் ஏற்பட்டுள்ள நிலையில் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்களை ஏற்படுத்தும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது.
ஹமெபேக் திமிலங்கள், காற்றை உள்ளிழுத்து வெளியே விடும் போது சூடான காற்றுடன் நீராவி சேர்ந்து பார்ப்பதற்கு வானவில் நிறங்களை வெளியேற்றுவது போன்ற தோற்ற மாயையை இது உருவாக்கும்.
உலகத்தின் 70% பகுதி கடலால் ஆனவை. கிட்டத்தட்ட 10 லட்சம் உயிரினங்கள் கடலின் மடியில் பிறந்து வாழ்ந்து வரலாறாகின்றன. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கின்ற சிறு மாற்றங்களும் கூட உயிரினங்களின் வாழ்விற்கு மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிடுவதை நாம் கண்கூட பார்க்கின்றோம்.
கடலின் ஆழத்தில் 600 மீட்டர்கள் வரை பயணிக்கும் இந்த கடல் வாழ் பாலூட்டியால் 8 வகையான குரல் ஒலிகளை வாய் மற்றும் சுவாசப்பாதை வழியாக ஏற்படுத்த முடியுமாம். கடல்வாழ் உயிரினமாக இருந்தாலும் இந்த வேட்டெல் சீல்கள் மூச்சு வாங்க கடலின் மேற்பரப்பிற்கு கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.