New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/11/odisha-woman-donates-property-to-rickshaw-puller.jpg)
25 ஆண்டுகளாக எங்களின் குடும்பத்திற்காக பணியாற்றும் புதாவுக்கு என்னுடைய சொத்தை சட்டப்பூர்வமாக எழுதித் தருகின்றேன்.
63 வயதான மினாதி பத்னிக் தன்னுடைய கணவர் மற்றும் மகளை ஒரே ஆண்டில் இழந்து தவிக்க, ரிக்ஷா ஓட்டும் புதா சமால் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மினாதிக்கு பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்துள்ளனர். எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தனக்கு உதவிய புதா சமாலுக்கு ரூ 1 கோடி மதிப்பிலான நகை மற்றும் இதர சொத்துகளை வழங்கியுள்ளார் மினாதி.
Odisha: A 63-year-old widow has donated all her properties worth about Rs 1 crore to a rickshaw puller in Cuttack
— ANI (@ANI) November 14, 2021
"After my husband & daughter died in quick succession, Budha Samal & his family have been taking care of me so I'm giving him my properties," Minati Patnaik says pic.twitter.com/9djGEnn8jn
இந்த ரிக்ஷா ஓட்டுநரும் அவருடைய குடும்பத்தினரும் மினாதியின் உற்ற உறவுகள் மரணத்திற்கு பிறகு உடன் இருக்கவில்லை என்றால், மினாதி யாருமற்ற தனி நபராக தவித்திருப்பார். இது தொடர்பாக மினாதி ஏ.என்.ஐ.யிடம் பேசிய போது என்னுடைய கணவர் மற்றும் மகளின் மரணங்களை தொடர்ந்து இவர்கள் தான் என்னை மிகவும் பாதுகாப்பாக கவனித்து வருகின்றனர். எனவே இவர்களுக்கு என்னுடைய சொத்தை எழுதித் தருகிறேன் என்று கூறியுள்ளார். இரண்டு அடுக்கு மாடி வீடு மற்றும் தங்க நகைகளை புதாவின் பெயரில் மினாதி எழுதிக் கொடுத்துள்ளார்.
25 ஆண்டுகளாக எங்களின் குடும்பத்திற்காக பணியாற்றும் புதாவுக்கு என்னுடைய சொத்தை சட்டப்பூர்வமாக எழுதித் தருகின்றேன். ஏன் என்றால் பிற்காலத்தில் அவரையோ அவருடயோ குடும்ப உறுப்பினர்களையோ யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறியுள்ளார் மினாதி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.