ஒடிசாவில் உள்ள கிராமம் ஒன்றில் 100க்கும் மேற்பட்ட பாம்புக் குட்டிகள் வீட்டில் இருப்பதே தெரியாமல் கூலித்தொழிலாளி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் சாம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் தான் கூலித்தொழிலாளியான பிஜய் பியூன். நேற்றைய தினம் இவரது மகள் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது பாம்பு ஒன்றை அவரின் வீட்டுக்குள் செல்வதை கவனித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினரை அழைத்து வீடு முழுவதும் பாம்பை தேடியுள்ளார்.
எங்கும் தேடியும் பாம்பு கிடைக்காததால், உடனே வனத்துறையினருக்கு கால் செய்து தனது வீட்டில் பாம்பு நுழைந்து விட்டதாகவும் உடனே அதை பிடிக்க வருமாறும் அழைத்துள்ளார். இதனையடுத்து, பிஜய்யின் வீட்டிற்கு சென்ற என்.ஜி.ஓ அமைப்பினர் சுமார் 5 மணி நேரம் அவரின் வீட்டில் தேடல் வேட்டையில் இறங்கினர்.
பிஜய் வீட்டின் கிணற்றுக்கு அருகில் இருந்த குழியை தோண்டிய வனத்துறையினருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த குழியில் சுமார் 100க்கும் மேற்பட்ட நாகப் பாம்பு குட்டிகள், குவியல் குவியலாக ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து இருந்துள்ளது. இதைப்பார்த்த பொதுமக்கள் பயத்தில் தெறித்து ஓடியுள்ளனர்.
அந்த குட்டி பாம்புகளுடன் இரண்டு ராகநாகப் பாம்புகளும், சுமார் 21 பாம்பு முட்டைகளும் இருந்துள்ளனர். கடந்த 1 வருடங்களுக்கு மேலாக இந்த் பாம்புக் குட்டிகள் இங்கு இருந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பாம்புகளை கைப்பற்றிய வனத்துறையினர் அவற்றை காட்டில் கொண்டு போய் விட்டனர்.
இத்தனை பெரிய பாம்பு பட்டாளம் தனது வீட்டில் இருப்பது தெரியாமலே பிஜய் பியூன் இத்தனை நாட்களாக குழந்தைகளுடன் பாதுகாப்பாக வசித்து வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: பாலிமர்