இது வண்டி இல்ல… எனக்கு வந்த தலைவலி! ஷோரூம் முன் ரூ. 1 லட்சம் ஓலா ஸ்கூட்டரைக் கொளுத்திய நபர்- வைரல் வீடியோ

. ஐந்து வயது மகனுடன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஸ்கூட்டரின் ஸ்டீயரிங் மற்றும் டயர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மெதுவாகச் சென்றதால் விபத்தில் இருந்து தப்பினோம். "என் மகன் உயிருக்கு ஏதேனும் ஆகியிருந்தால் யார் பொறுப்பு?" என்று கேள்வி எழுப்பினார்.

. ஐந்து வயது மகனுடன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஸ்கூட்டரின் ஸ்டீயரிங் மற்றும் டயர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மெதுவாகச் சென்றதால் விபத்தில் இருந்து தப்பினோம். "என் மகன் உயிருக்கு ஏதேனும் ஆகியிருந்தால் யார் பொறுப்பு?" என்று கேள்வி எழுப்பினார்.

author-image
WebDesk
New Update
5

Ola scooter fire

குஜராத்தின் பாலன்பூர் நகரமே இந்தச் சம்பவத்தால் உறைந்துபோனது. சேவை மையத்தின் வாசலில் ஆவேசத்துடன் நின்ற ஒரு நபர், தனது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொளுத்தினார். கண்ணிமைக்கும் நேரத்தில் நீல நிற ஸ்கூட்டர் கரும்புகை சூழ எரிந்து நாசமானது.
 
எரிந்து சாம்பலான ஸ்கூட்டரின் உரிமையாளர், "இது ஒரு வாகனம் அல்ல, எனக்கு வந்த தலைவலி" எனக் கொந்தளித்தார். ஐந்து வயது மகனுடன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஸ்கூட்டரின் ஸ்டீயரிங் மற்றும் டயர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மெதுவாகச் சென்றதால் விபத்தில் இருந்து தப்பினோம். "என் மகன் உயிருக்கு ஏதேனும் ஆகியிருந்தால் யார் பொறுப்பு?" என்று கேள்வி எழுப்பினார்.

Advertisment

பலமுறை புகார் அளித்தும், சேவை மையத்திற்கு அலைந்து திரிந்தும், ஓலா நிறுவனம் தனது புகார்களை முற்றிலும் புறக்கணித்ததால் விரக்தியடைந்து இத்தகைய முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இது முதல் முறையல்ல: 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவே, நெட்டிசன்கள் ஓலா நிறுவனத்தின் மோசமான வாடிக்கையாளர் சேவையை கடுமையாக விமர்சித்தனர். "இது தனிப்பட்ட சம்பவம் அல்ல; இதேபோலப் பல ஓலா ஸ்கூட்டர் உரிமையாளர்கள் வாகனம் பழுதானதால் எரித்துள்ளனர் அல்லது தூக்கி வீசியுள்ளனர்," என்று ஒரு பயனர் சுட்டிக்காட்டினார்.

Advertisment
Advertisements

சமீபத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவின் கலபுரகியில் நிகழ்ந்துள்ளது. அங்கு 26 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், ஓலா எலெக்ட்ரிக் ஷோரூமுக்குத் தீ வைத்தார். தனது ஸ்கூட்டரில் திரும்பத் திரும்பப் பிரச்சனைகள் எழுந்தும், ஷோரூம் ஊழியர்கள் அதைப் புறக்கணித்ததாலேயே அவர் ஆத்திரமடைந்து இச்செயலில் ஈடுபட்டதாகக் காவல்துறை தெரிவித்துது. இந்தச் சம்பவங்கள் அனைத்தும், மின்சார வாகனப் புரட்சிக்கு மத்தியில், வாடிக்கையாளர் சேவை மற்றும் வாகனப் பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

ola

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: