கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலைகள் உயரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் மேம்பால பணிகள் முழுமை பெறாமல் உள்ளதால் மழைநீர் வடிகால் பணிகளும் முடிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து இரவு வரை பலத்த மழை பெய்தது. பாலத்தின் மீது இருந்த தேங்கிய தண்ணீர் கீழே விழந்தது.
அருவி மாதிரி அந்த மழை நீர் விழந்ததை பார்த்த அங்கிருந்த ஒருவர் உடனடியாக ஒடி அந்த அருவி நீரில் குளித்தார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் தற்போது பகிர் பட்ட வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“