/tamil-ie/media/media_files/uploads/2020/03/New-Project-2020-03-02T125955-7.jpg)
old woman speaks in english about mahatma gandhi, இங்லீஷ் பேசும் மூதாட்டி, ஆங்கிலத்தில் பேசும் பாட்டி, மகாத்மா காந்தி பற்றி ஆங்கிலத்தில் பேசும் பாட்டி, வைரல் வீடியோ, old lady peaks in english about mahatma gandhi, grandma speak in english, english speaking old woman, english speaking old lady, viral video
மூதாட்டி ஒருவர் மகாத்மா காந்தியைப் பற்றி ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் வீடியோ இணையத்திலும் சமூக ஊடங்களிலும் வைரலாகி வருகிறது.
உலகத்தில் அதிக நாடுகளில் பயன்படுத்தப்படும் மொழி ஆங்கிலம். ஆங்கிலம் இன்று பலராலும் அறிவின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. உண்மையில் அப்படி இல்லை. தமிழ், தெலுங்கு, ஜெர்மன், பிரெஞ்சு, மொழிகளைப் போல அதுவும் ஒரு மொழிதான்.
ஆங்கிலத்தை ஒவ்வொரு நாட்டிலும் ஒரு விதமான உச்சரிப்புடன் பேசுகிறார்கள். உதாரணத்துக்கு தமிழகத்தில் கல்லூரியை ஆங்கிலத்தில் காலேஜ் என்று கூறுகிறோம். கேரளாவில் கோலஜ் என்று உச்சரிக்கிறார்கள். அதே போல, தமிழகத்தில் ஆட்டோரிக்ஷாவை ஆட்டோ என்கின்றனர். இலங்கை தமிழர்கள் ஓட்டோ என்று சொல்கிறார்கள். தமிழகத்தில் சூப்பர்வைசர் என்று சொல்ல, வட இந்தியாவில் சூப்பர்விஜார் என்று சொல்கிறார்கள். இப்படி ஓவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு உச்சரிப்பு முறையில் ஆங்கிலம் பேசப்படுகிறது.
How many marks out of 10 for the old lady for this spoken English Test? pic.twitter.com/QmPSEd4o0L
— Arun Bothra (@arunbothra) March 1, 2020
நமது பள்ளிகளில் ஆங்கிலத்தை இரண்டாவது மொழி பாடமாக முதல் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தாலும் உண்மையில் பலராலும் ஆங்கிலத்தை இயல்பாக சரளமாக பேச முடியவில்லை. இப்படியான, சூழலில் பாட்டி ஒருவர் மகாத்மா காந்தி பற்றி ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் பாட்டி பள்ளி மாணவர்கள் காந்தியைப் பற்றி பேச்சுப்போட்டியில் பேசுவது போல தடையில்லாமல் பேசுகிறார். இந்த வீடியோவின் முடிவில் இந்த பாட்டி தனது பெயரை பகவானி தேவி என்று சொல்கிறார்.
பகவானி தேவி பாட்டியின் காந்தியைப் பற்றிய ஆங்கிலப் பேச்சு பார்ப்பவர்கள் பலரையும் வியக்கவைத்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.