மகாத்மா காந்தியின் 70-வது நினைவு தினம் இன்று. இன்றைய நாளில் பிரிட்டிஷ் காலத்தில் எடுக்கப்பட்ட காந்தியின் மிக அரிய சில வீடியோக்களை இங்கு காணுங்கள். 1930 முதல் 1947 வரையிலான காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இவை. வட்ட மேசை மாநாட்டுக்காக லண்டன் செல்லுதல், அங்கு நிகழ்பெற்ற சம்பவங்கள் உள்ளிட்டவை இங்கு வீடியோக்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
Advertisment
லண்டனில் காந்தி (1931):
காந்தி லண்டனுக்கு சென்றபோது மார்சீல் நகரத்திற்கும் சென்றார். அந்த வீடியோவில், காந்தியுடன் நெருங்கிய துணையாக இருந்த மீரா பென்னும் இருக்கிறார்.
சார்லி சாப்ளினுடன் காந்தி (1931):
லண்டனில் சார்லி சாப்ளினை சந்தித்தார் காந்தி. இருவரையும் காண லண்டன் மக்கள் ஆர்ப்பரித்த வீடியோ இதோ:
லண்டனில் காந்தி தங்கியிருந்த வீடு (1931):
வட்ட மேசை மாநாட்டுக்காக காந்தி லண்டன் சென்றிருந்தபோது, அவர் தங்கியிருந்த வீடு இதுதான். இந்த வீடியோவில், காந்தியை உபசரித்த முரியல் லெஸ்டரும் உள்ளார். அதன்பிறகு, 1934-ஆம் ஆண்டு, நிலநடுக்கம் ஏற்பட்ட பீகாரில் தீண்டாமை எதிர்ப்பு பயணத்தை காந்தி மேற்கொண்டிருந்தபோது, முரியல் லெஸ்டரும் உடனிருந்தார்.
ரோம் நகரில் காந்தி (1931):
1931-ஆம் ஆண்டு காந்தி ரோம் நகருக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.