New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/07/template-2020-07-24T184142.509.jpg)
Viral video : வீட்டுப்பாடத்தை படிக்க சொன்ன தாயிடம் குழந்தை தனது மழலை குரலில் கெஞ்சிக் கேட்கும் காட்சி, ரசிப்பதா அல்லது ஆன்லைன் பாடத்தின் கொடுமையை சொல்வதா என தெரியவில்லை.
ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாடத்தை செய்யாத குழந்தை, தனது தாயிடம் கால அவகாசம் கேட்டு அழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசே, 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு கல்வி தொலைக்காட்சி சேனல் மூலம் பாடங்கள் நடத்தி வரும் நிலையில், தனியார் பள்ளிகள் மட்டுமல்லாது, சில அரசு பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு வாட்ஸ்அப் உள்ளிட்ட தொழில்நுட்ப உதவியுடன் வீட்டுப்பாடங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நீ confirmeda ஒரு அட்டகாசமான #backbencher ???????????? ஆக உருவெடுத்து விழுந்து விழுந்து mug அடிச்சு படிக்கிற புத்திசாலிகளுக்கு வேலை போட்டுக் கொடுக்கிற ஒரு CEO வா வருவடா தம்பி ???????????? தம்பி நல்லா வணக்கம் வைக்கிறான் ???? அரசியல்ல கூட உனக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்குடா ???????? ! #OnlineClasses pic.twitter.com/CYCDPFQD3v
— T R B Rajaa (@TRBRajaa) July 24, 2020
ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் முன் தலையை ஆட்டிவிட்டு, பின்பு வீட்டுப்பாடத்தை படிக்க சொன்ன தாயிடம் குழந்தை தனது மழலை குரலில் கெஞ்சிக் கேட்கும் காட்சி, ரசிப்பதா அல்லது ஆன்லைன் பாடத்தின் கொடுமையை சொல்வதா என தெரியவில்லை.
ஆனால் அந்த சிறுவன், இரண்டு நாள் வீட்டுப்பாடத்தை நாளைக்கு முடித்துக்கொள்கிறேன், கெஞ்சிக் கேட்கிறேன் என இரண்டு கைகளை எடுத்து கும்பிட்டு தாயிடம் கெஞ்சிய காட்சி மனதை லேசாக்குகிறது. டீ குடிச்சுட்டு ரெஸ்ட் எடுங்க மா, நாளைக்கு நா படிச்சுட்டு சொல்றேன் என குழந்தை தாயிடம் அழுது கொண்டே கூறிய காட்சி வலைதளங்களில் வைரலாகி பலரது நெஞ்சங்களில் குடியமர்ந்து கொள்கிறான் இந்த சிறுவன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.