ஆப்டிக்கல் இல்லுசன்ஸ் படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்ட் ஆகிவருகின்றன. இந்த ஒளியியல் மாயை படங்கள் கண்ணுக்கு நல்ல பயிற்சி அளிப்பதோடு, மூளைக்கும் நல்ல சுறுசுறுப்பை கொடுக்கின்றன. ஆகவே இதுபோன்ற ஒளியியல் மாயை படங்களை சில உளவியல் மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். தற்போது நாம் பார்க்கப் போகும் படத்தில் வண்ணத்துப்பூச்சி ஒன்று மறைந்துள்ளது.
Advertisment
இந்த வண்ணத்துப்பூச்சியை கண்டுபிடிக்க உங்களுக்கு 20 நொடிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அது அவ்வளவு எளிதல்ல. சில நேரங்களில் இந்தப் படத்தில் உள்ள வண்ணத்துப் பூச்சியை கண்டுபிடிக்க 60 நொடிகள் கூட ஆகலாம். ஆகவே, பொறுமையாக கூர்மையாக பாருங்கள்.
கழுகின் பார்வைப் போல் கண்களை விரித்துப் பார்த்தால் மட்டுமே நீங்கள் விடையை நெருங்க முடியும். சரி முதலில் நாங்கள் உங்களுக்கு ஒரு க்ளூ கொடுக்கிறோம். வண்ணத்துப் பூச்சி கீழே ஒரு ஓரத்தில் ஒளிந்துள்ளது. சிலர் சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள் என நினைக்கிறேன். அப்படி கண்டுபிடிக்காத நபர்களுக்கு விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வண்ணத்துப் பூச்சி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“