ராணுவ ஹெலிகாப்டரை வாடைகைக்கு எடுத்தாரா ஓபிஎஸ்.. மீம்ஸ்களால் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

அது என்ன ராணுவ ஹெலிகாப்டர் ஆம்புலனஸ் என்று  கேட்பவர்களுக்கு இதோ அதன் விளக்கம்.

அதிமுக – பாஜக அரசியலில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் விஷயம் என்னவென்றால் அது ராணுவ ஹெலிகாப்டர்  ஆம்புலனஸ் சர்ச்சை தான். அது என்ன ராணுவ ஹெலிகாப்டர் ஆம்புலனஸ் என்று  கேட்பவர்களுக்கு இதோ அதன் விளக்கம்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய சகோதரர் பாலமுருகன் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.

அப்போது பெங்களூரில் உள்ள ராணுவ ஹெலிகாப்டரை, ஓபிஎஸ்- இன் தம்பிக்காக  மதுரைக்கு  நிர்மலா சீதாராமன் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த ராணுவ ஹெலிகாப்டரில் பாலமுருகன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஓபிஎஸ்  செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பேட்டியால் கோபமடைந்த நிர்மலா சீதாராமன், ஓபிஎஸ்ஸை சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் . ராணுவ ஹெலிகாப்டர் தனிப்பட்ட ஒருவரின் தேவைக்காக எப்படி வழங்கப்பட்டது மிகவும் தவறான செயல் என்றும்,   தவறை ஓப்புக் கொண்ட ஓபிஎஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பதவி விலக வேண்டும் எதிர்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

நேற்று முதல் ராணுவ ஹெலிகாப்டர் சர்ச்சை சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.  மீம்ஸ் கிரியேட்டர்கள், நெட்டிசன்கள் ஆகியோர்   வழக்கம் போல் அரசியல் மீம்ஸ்களை ஃபேஸ்புக், ட்விட்டரில் அள்ளி தூவி வருகின்றன.  வைரலாகிக் கொண்டிருக்கும் அந்த மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு..

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close