scorecardresearch

அன்னாசிப் பழங்களுக்கு இடையே 4 மக்காச்சோளம்; 40 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தேடுகிற கதைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால், பப்பாளி விதைகளுக்கு இடையே, ஒரு மிளகை கண்டுபிடிப்பது போன்றது.

Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகள் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கண்டுபிடியுங்கள் என்று விடுக்கும் சவால்களுக்கு விடை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தேடுகிற கதைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால், பப்பாளி விதைகளுக்கு இடையே, ஒரு மிளகை கண்டுபிடிப்பது போன்றது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் எல்லாமே பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், அதற்குள்ளேதான் புதிர்கள் மறைந்திருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக மட்டுமலாமல், கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற புதிர்களாகவும் இருக்கிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் முழுவதும் அன்னாசிப் பழங்கள் நிறைந்திருக்கிறது. இந்த அன்னாசிப் பழங்களுக்கு இடையே 4 மக்காச்சோளம் உள்ளது அதை 40 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை, பிரபல ஹங்கேரி நாட்டு ஓவியர் ஜெர்ஜ்லி டுடால்ஃப் வரைந்துள்ளார். இவர் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் புகழ்பெற்றவர். ஜெர்ஜ்லி டுடால்ஃப் இந்த படத்தை தனது பிளாகில் வெளியிட்டுள்ளார். அதில், அன்னாசிப் பழங்களுக்கு இடையே 4 மக்காச்சோளத்தைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார். அதிலும் 40 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். இது மேலோட்டமாக பார்ப்பதற்கு, எளிதாக இருப்பது போல இருக்கும். ஆனால், அவ்வளவு எளிதல்ல. மிகவும் கடினம்.

அன்னாசிப் பழங்களுக்கு இடையே 4 மக்காச்சோளங்களை 40 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக விடையை இங்கே தருகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optial illusion can you find four corns among the pineapples in this image