scorecardresearch

இந்த 7 படங்களில் மறைந்திருக்கும் முகங்களை கண்டுடிங்க… உங்க பார்வைத் திறனுக்கு ஒரு சவால்!

இங்கே 7 ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திலும் முகங்கள் மறைந்திருக்கிறது. உங்களால் முடிந்தால் மறைந்திருக்கும் முகங்களைக் கண்டுபிடியுங்கள் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு விடும் சவால்.

Optical illusion, optical illusion 7 photos, ஆப்டிகல் இல்யூஷன், இந்த 7 படங்களில் மறைந்திருக்கும் முகங்களை கண்டுடிங்க, உங்க பார்வைத் திறனுக்கு ஒரு சவால், find hidden faces a challenge to your eye vision, optical illusion art

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. சில ஆப்டிகல் இல்யூஷன்கள் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. இதனால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி நெட்டிசன்கள் படையெடுத்து வருவதால், ஆப்டிகல் இல்யூஷன் வைரலாகி புயல்போலத் தாக்கி வருகின்றன.

இங்கே 7 ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திலும் முகங்கள் மறைந்திருக்கிறது. உங்களால் முடிந்தால் மறைந்திருக்கும் முகங்களைக் கண்டுபிடியுங்கள் என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடுகிறது. ஆனால், இந்த படத்தில் மறைந்திருக்கும் அனைத்தும் முகங்களும் முகம் அல்ல.

டி. ரஸ்டியின் வித்தியாசமான ஓவிய உலகில் மூழ்குங்கள், பென்சில்வேனியா கலைஞரான இதுபோன்ற அரூப கலைப்படைப்புகளில் ஆர்வம் கொண்டவர். இந்த திறமையான ஆப்டிகல் இல்யூஷன் ஓவியர் குழந்தைகள், டீன் ஏஜ் சிறார்கள், மற்றும் முதியவர்கள் தங்கள் மனதைக் கூர்மையாக வைத்திருக்க விரும்பும் பல ஓவியங்களை அளிக்கிறார்.

இந்த 7 படங்களிலும் மறைந்திருக்கும் ஓவியங்களைப் பாருங்கள். வியப்பூட்டும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், இதில் மறைந்துள்ள முகங்களைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுகிறது. இது நீங்கள் நினைப்பதை விட தந்திரமானது சவாலானது.

  1. நாட் கிங் கோல் இதை விரும்புவார்

இந்த படங்களில் மறைந்துள்ள முகங்களைக் கண்டுபிடிப்பது கடினம். ஆனால், இதை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

இந்த ஓவியத்தை பெரிய அளவில் பார்ப்பதற்கு rustyart.net/illusion இணையத்தில் பாருங்கள்.
எளிதான வார்ம்அப்புடன் ஆரம்பிக்கலாம். இந்தப் படத்தைப் பாருங்கள். தந்தையும் மகனும் ஒன்றாக மீன்பிடிக்கும் பிரபலமான முகத்தை நீங்கள் பார்க்க முடியுமா?

2.. டர்க்கைஸ் கனவுகள்

நீங்கள் உங்கள் பார்வைத் திறனை சோதிக்க வேண்டியிருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்துள்ள முகங்களை கண்டுபிடிக்க வேண்டியதில்லை. நீங்கள் ஒரு முகத்தை மட்டுமே கண்டுபிடிக்க வேண்டும்!

இப்போது கொஞ்சம் கடினமான ஒன்றிற்கு செல்லலாம். கடலில் ஒரு அலை மோதுவதை சில நிமிடங்களுக்கு ஒரு எளிய படத்தை நீங்கள் காணலாம். ஒருவேளை நீங்கள் படகைப் பார்த்து, மறைந்துள்ல முகத்தை தேடிக்கொண்டிருக்கலாம்.

மறைந்துள்ள முகத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியாவிட்டால் விட்டுவிடாதீர்கள். சர்ஃப் செய்பவர் சொல்வது போல் அலையில் சவாரி செய்யுங்கள்.

  1. இந்த பர்ர்-ஃபெக்ட் படத்தில் மறைந்துள்ள முகங்களைக் கண்டுபிடிக்க முடியுமா?

மறைந்துள்ள முகங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் சிங்கம் கர்ஜிப்பதை வேடிக்கையாக பாருங்கள். ஆனால், நீங்கள் இறுதியாக “யுரேகா!” என்று சொன்னால் பாராட்டுகள்.

  1. அழகான சூரிய அஸ்தமனம்

ஒரு அற்புதமான சூரிய அஸ்தமனம் இந்த பறவைகளை கிட்டத்தட்ட தேவதையாகக் காட்டுகிறது. மீண்டும், பறவைகளின் ஓவியத்தை பாராட்டுவது எளிது. இதில் மறைந்துள்ள முகத்தை கண்டுபிடியுங்கள்.

  1. தனி ஓநாய்

மலையின் மீது ஒரு ஓநாய் ஊளையிடுகிறது; ஆனால், நீங்கள் நினைப்பது போல் ஓநாய் தனியாக இல்லை. இன்னொரு ஓநாய் மறைந்திருக்கிறது. இந்த ஓவியத்தில் மறைந்துள்ள ஓநாய் முகத்தைக் கண்டுபிடியுங்கள்.

  1. இந்த ஓவியத்தில் மறைந்துள்ள முகங்களைக் கண்டுபிடிக்க முடியுமா?

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்துள்ள முகங்களைக் கண்டுபிடிக்க விரும்பினால், உற்று கவனியுங்கள். இந்த ஓவியத்தில் பல ரகசியங்களை தவறவிடுவது எளிது. இதில் நீங்கள் முதலில் ஒரு வேட்டைக்காரனை ஒரு அழகிய காட்டுப் பகுதியில் பார்க்கலாம். அதே நேரத்தில் நிறைய முகங்களையும் கண்டுபிடிக்கலாம்.

  1. இதைக் கண்டுபிடிக்க சிறிது நேரம் ஆகலாம்

இந்த வேடிக்கையான ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்துள்ள முகங்களைக் கண்டுபிடிக்க உங்கள் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இது வேடிக்கையானது, ஏனென்றால், இது மற்றவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த ஓவியத்தில் உள்ள கார்கள், கதாபாத்திரங்கள், வானம் மற்றும் வீட்டைப் பாருங்கள். மறைந்துள்ள முகத்தை கண்டுபிடித்துவிடலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion 7 photos find hidden faces a challenge to eye vision

Best of Express