/tamil-ie/media/media_files/uploads/2023/08/Tiger-Goat-1.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் புதிர்
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை அதிரடியாக கலக்கி வருகிறது. ஒரு பெரிய ராட்சத காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போன நெட்டிசன்கள் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷனில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Tiger-Goat-1-1.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆட்டு மந்தையில் வேட்டையாட நுழைந்த 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி. எளிதான சவால்தான். ஆனால், மிக விரைவாக கண்டுபிடிப்பது என்பது கொஞ்சம் கடினம்தான்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Tiger-Goat-1-2.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சாலையில் ஆடுகள் மந்தையாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆடுகளை வேட்டையாடுவதற்காக ஒரு புலி ஆட்டு மந்தையில் புகுந்துவிட்டது. அந்த புலி ஆடுகளை வேட்டையாடுவதற்கு முன்பு 5 நொடிகளில் புலி எங்கெ இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூமையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் கில்லி. நீங்கள் கில்லினு காட்டுவதற்கான நேரம் இது ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், காகிதப் பூக்களுக்கு இடையே உண்மையான பூவைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். பொய்களுக்கு இடையே உண்மையைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை, அது நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள் மேற்கூறிய எல்லாமே அனுபவமாகும்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆட்டு மந்தையில் புகுந்த நரியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாவே நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Tiger-Goat-1-3.jpg)
அதே நேரத்தில், புலி எங்கே இருக்கிறது என சிலர் இன்னும் தேடிக் கொண்டிருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். வலது ஓரத்தில் கவனமாகப் பாருங்கள். புலி தாக்குவதற்கு தயாராக இருப்பதைப் பாருங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Tiger-Goat-2.jpg)
நீங்கள் இப்போது இந்த படத்தில் வலது ஓரம் ஆடுகள் இடையே கூர்மையாகப் பார்த்து புலியைக் கண்டுபிடித்து விட்டிருக்கலாம். ஆனாலும், சிலர் புலி எங்கே இருக்கிறது என தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.