Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை சாதாரணமான பார்வை கொண்டவர்களுக்கு தெரியாது. கழுகுப் பார்வை கொண்டவர்களால் மட்டுமே பாம்பை காணமுடியும். ஏனென்றால், இது ஒரு IQ டெஸ்ட். உங்கள் பார்வைத் திறனையும் உங்கள் கவனிக்கும் திறனையும் பரிசோதனை செய்வதற்கான சவால்.

இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 6 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கழுகுப் பார்வை. ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் IQ டெஸ்ட் என்றால், உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பி, படத்தில் உள்ள விஷயங்களை பார்த்து உணர்ந்து புரிந்துகொள்ள்ம் திறனை சவால் செய்வதுதான். அனைத்து ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் மையக் கருப்பொருள் உங்கள் மனதை ஏமாற்றுவதாகும். கடந்த பத்தாண்டுகளில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புகழ் அதிவேகமாக வளர்ந்துள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விளையாட்டாக மாறி இருக்கிறது. நெட்டிசன்கள் புதிய ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதை விரும்புகிறார்கள். இந்த சவால்களைத் தீர்ப்பதன் மூலம் நெட்டிசன்களின் நண்பர்கள் மற்றும் சகாக்கள் மத்தியில் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்களைக் காட்ட முடியும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் உள்ள வீட்டில் ஒரு மனிதன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறான். வீட்டைச் சுற்றி கள்ளிச் செடிகள் இருக்க, வீட்டின் அருகே ஒரு தேள் ஊர்ந்து வருகிறது. அதே நேரத்தில், இந்த படத்தில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் உங்களுக்கு கழுகுப் பார்வை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு கழுகுப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கழுகுப் பார்வை கொண்டவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். வீட்டின் தாழ்வாரத்தில் கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது நீங்கள் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே உங்களுக்கு கழுகுப் பார்வைதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“