Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தாலே நெட்டிசன்கள் ஆயிரக் கணக்கில் படையெடுத்து வந்து வெறித்தனமாக தேடி விடை கண்டுபிடிக்கிறார்கள். அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் சுவாரசியமானது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கேட்கப்படும் புதிர், கணினியில் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போயிருக்கும் நெட்டிசன்களை ரிலாக்ஸ் செய்ய வைத்து உற்சாகம் அளிக்கிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 6 நொடிகளில் கண்டுபிடித்து சரியாக சொன்னால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் சிங்கம். ஏனென்றால், புலிகளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.
நெட்டிசன்கள் மத்தியில் வனவிலங்குகள் வீடியோவுக்கு இருக்கும் அதே வரவேற்பு வனவிலங்குகளை கண்டுபிடிக்க சவால் விடும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் இருக்கிறது. அதனால்தான், இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் ஆயிரக் கணக்கில் வைரலாகிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் லேட்டஸ்ட் நியூஸ் பிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இதில் ஒரு வெள்ளைப் புலி இருக்கிறது. ஆனால், இந்த புலியுடன் இன்னும் சில புலிகள் இருக்கிறது. அதனால், இந்த படத்தில், மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 6 நொடிகளில் சரியாகக் கண்டுபிடித்து கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் சிங்கம். நீங்கள் சிங்கம் என்பதை நிரூபியுங்கள்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் சிங்கம்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் இந்த படத்தில் ஒரு புலிதான் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சிலர் 2 புலி இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷனில் சிங்கம் என்று அழைக்கப்படுபவர்கள் இந்த படத்தில் 3 புலிகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் 3 புலிகளும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“