Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் இனிப்பை நோக்கி சாரைசாரையாக அணி வகுத்துச் செல்லும் எறும்புகளைப் போல, ஆப்டிகள் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷனில் சுவாரசியம் இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷனில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷனில் ஒரு குழப்பம் இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷனில் ஒரு த்ரில்லிங் இருக்கிறது. அதைவிட ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது. அதைவிட ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு பயிற்சியை அளிக்கிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இதில் ஒரு காட்டுப் பகுதியில் மரங்கள் செடிகொடிகள் பச்சை இலை தழைகள் புதர்கள் நிறைந்திருக்கிறது. அதில், ஒரு பச்சைப் பாம்பு மறைந்திருக்கிறது. பச்சை பாம்பு 1 நிமிடத்தில் கண்டுபிடித்தால் நீங்கதான் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் பாட்ஷா பாய். ஏனென்றால், 1 நிமிடம் அல்ல எவ்வளவு நேரம் தேடினாலும் கண்டுபிடிப்பது கடினம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலைப் படிப்பவர்கள் முதலில் இவ்வளவு எளிதாக இருக்கிறதே என்று சவாலை ஏற்று தேடத் தொடங்குவார்கள். ஆனால், தேடத் தொடங்கியதுமே அவர்கள் குழப்பம் அடைவார்கள். மறைந்திருக்கிற விலக்கு எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தலைமுடியை பிச்சிக்கொள்வார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை, ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்துள்ளார். அவர் ஒரு காட்டை டிஜிட்டல் ஓவியமாக வரைந்திருக்கிறார். அதில் மரங்கள் செடி கொடிகள், இலைகள், தழைகள், புதர்கள் என்று முழுவதுமாக பச்சை நிறத்தில் வரைந்திருக்கிறார். அதற்கு இடையே ஒரு பச்சைப் பாம்பையும் மறைத்து வைத்திருக்கிறார். அந்த பச்சைப் பாம்பை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடுத்துள்ளார். அதிலும் 1 நிமிடத்தில் பச்சை பாம்பை கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது.
பச்சைப் பாம்பு கண் கொத்தி பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. பச்சை மரங்களில் பச்சை பாம்பு இருப்பது தெரியாது. உடல் முழுவதும் பச்சை நிறத்தில் இருக்கும் பாம்பு மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. ஆனால், கூர்மையாகத் தேடத் தொடங்கினால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் இல்யூஷன் செய்யப்பட்டுள்ள பச்சைப் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 1 நிமிடத்தில் பச்சைப் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கதான் பாட்ஷா பாய். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் அமைதியான ரஜினி ஒரு பெரிய தாதாவாக பாட்ஷாவாக இருந்திருப்பார். அதே போல, நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷனில் பச்சை பாம்பை கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் பாட்ஷா நீங்கதான். ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால்.
ஒருவேளை, உங்களால் பச்சைப் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் பச்சைப் பாம்பு படத்தின் கீழ்ப் பகுதியில் இருக்கிறது. நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் கண்கொத்தி பாம்பு என்கிற பச்சைப் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக பச்சைப் பாம்பு எங்கே இருக்கிறது என்று காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.