Optical illusion game: ஒவ்வொரு நாளும் இணையத்தில் விதவிதமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் எண்களை அடிப்படையாகக் கொண்டது. இதில் 10 எண்கள் இருக்கிறது. ஆனால், அதை சரியாக கண்டுபிடித்தவர்கள் வெறும் 0.1% பேர்கள்தான். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் குழப்பத்தையும் இரண்டாவது பார்வையில் மேலும் குழப்பத்தையும் அளிக்கும். ஆனால், இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிக்கும். படதில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள், பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்த படம் எண்களை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தரக்கூடிய சுவாரசியான ஆப்டிகல் இல்யூஷன் படம் இது.

மனதைக் கவரும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள 10 எண்களையும் கண்டுபிடிக்க முடியாததால், பலரும் தங்கள் தலைமுடியைப் பிச்சிக் கொள்கிறார்கள்.
எண்களை அடிப்படையாகக் கொண்ட இந்த சிக்கலான படத்தை TikTok பயனர் @purpzsaur வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும், இதில் உள்ள 10 எண்களைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
நீங்கள் சரியாக கண்டுபிடித்து கூர்மையான பார்வையுடைய 0.1% பேர்களின் வரிசையில் இடம்பிடியுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“