/indian-express-tamil/media/media_files/2025/07/20/ducklings-1-2025-07-20-12-25-17.jpeg)
மரத்தடியில் மறைந்திருக்கும் 5 வாத்துக் குஞ்சுகள் Photograph: (Image Source: Reddit)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது இணையத்தில் நெட்டிசன்களை மயக்கி வைத்திருக்கும் ஒரு சுவாரசியமான விளையாட்டு. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அதன் சுவாரசியத்தில் மயக்கி வைத்திருக்கிறது. நீங்களும் ஒரு முறை விளையாடிப் பாருங்கள், மயங்கிப் போவீர்கள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/20/ducklings-1-2025-07-20-12-25-17.jpeg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தடியில் மறைந்திருக்கும் 5 வாத்துக் குஞ்சுகளை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி. ட்ரை பண்ணி பாருங்க.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை, மந்திரமில்லை. ஆனால், அது ஒரு தந்திரம். ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்ற இந்த வரிகள் அப்படியே ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டுகளுக்கும் பொருந்தும்.
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற எம்.ஜி.ஆர் படத்தின் தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/20/ducklings-2-2025-07-20-12-25-17.jpeg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த படத்தில் ஒரு மரத்தின் அடியில் ஒரு தாய் வாத்து நின்று கொண்டிர்க்கிறது. அதனுடன் 5 வாத்துக் குஞ்சுகள் மறைந்திருக்கின்றன. அந்த 5 வாத்துக் குஞ்சுகளையும் 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. இந்த சவாலை எளிதாகத் தீர்க்கலாம். ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 5 வாத்துக் குஞ்சுகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/20/ducklings-2-2025-07-20-12-25-17.jpeg)
ஆனால், பலரும் இந்த படத்தில் 5 வாத்துக் குஞ்சுகளையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். சிலர் 3, 4 வாத்துக் குஞ்சுகளைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், பலே கில்லாடிகள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் 5 வாத்துக் குஞ்சுகளையும் கண்டுபிடித்து சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் 5 வாத்துக் குஞ்சுகளும் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். வாத்துக் குஞ்சுகள் கண்ணில் படலாம்.
இப்போது நீங்கள் 5 வாத்துக் குஞ்சுகளையும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். அதே நேரத்தில், இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு 5 வாத்துக் குஞ்சுகள் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/20/ducklings-3-2025-07-20-12-25-17.jpeg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.