New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/OI-Rat.jpg)
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஓவியத்தில் மொத்தம் எத்தனை எலிகள் இருக்கிறது என்பதை 5 நொடிகளில் சரியாக கண்டுபிடிக்க சவால். எலிகளை பூனைகள்தான் கண்டுபிடித்து வேட்டையாடும். ஆனால், ஆப்டிகல் இல்யூஷனில், எலிகளைக் கண்டுபிடித்தால் நீங்கள் பூனை அல்ல புலி.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை வெறித்தனமாக தீர்த்து வருகிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் உற்றுப் பார்க்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியும். இதில் எது உண்மையான தோற்றம் என்று புரியாமல் அது நம்மை தோற்ற மயக்கத்தில் ஆழ்த்தும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஓவியத்தில் மொத்தம் எத்தனை எலிகள் இருக்கிறது என்பதை 5 நொடிகளில் சரியாக கண்டுபிடித்து சொல்ல வேண்டும் என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. எலிகளை பூனைகள்தான் கண்டுபிடித்து வேட்டையாடும். ஆனால், ஆப்டிகல் இல்யூஷனில், எலிகளைக் கண்டுபிடித்தால் நீங்கள் பூனை அல்ல புலி.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இன்று நேற்று உருவானது அல்ல. கி.மு. 3,000 ஆண்டுகளுக்கு முன்னர், பண்டைய கிரேக்கர்களின் காலத்தில் இருந்தே, ஆப்டிகல் இல்யூஷன் இருந்து வருவதாகக் கூறுகிறார்கள். கி.மு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஓவியத்தில் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அதோடு, எலிகளும் இருக்கிறது. இந்த படத்தில் மொத்தம் எத்தனை எலிகள் இருக்கிறது என்று சரியாக கண்டுபிடித்துக் கூற முடியுமா என்று ஆப்டிகல் இல்யூஷனில் வல்லவரான உங்களுக்கு சவால் விடப்படுகிறது.
பிரைட் சைட் தளத்தில் வெளியாகியுள்ள இந்த படம் உங்கள் மூளையின் திறனை சோதிப்பதற்கான ஒரு தந்திரமான புதிராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஓவியத்தில், மொத்தம் எத்தனை எலிகள் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என்று கேட்டதும் பலரும் 1 எலி, 2 எலி, 3 எலி என்று கணக்குகளை அடுக்கிக்கொண்டே போகிறார்கள். உண்மையில் எத்தனை எலி இருக்கிறது என்று புதிர் உருவாக்கியவர்களுக்குத்தான் தெரியும் இல்லையா?
எலிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் பலரும் தங்கள் தலைமுடியைப் பிச்சிக்கொள்கிறார்கள். சிலர் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் தேடுவதை விட்டுவிட்டு நேரடியாக விடை என்ன என்பதைக் காண்கிறார்கள். சரி நீங்கள் எத்தனை எலிகளைக் கண்டுபிடித்தீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது இந்த படத்தில் எத்தனை எலிகள் இருக்கிறது என்று நாங்கள் உங்களுக்கு வட்டமிட்டு காட்டுகிறோம். நீங்கள் கண்டுபிடித்த எலிகளின் எண்ணிக்கையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.