Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களுக்கு எளிதாக விடை கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்தால் அது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும். உங்களை சுற்றவிட்டு வேடிக்கை பார்க்கும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்றுப் பார்க்கும்போது வேறு மாதியாகவும் தெரியும். படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிக்கத் தேடினால், கண்ணாமூச்சி காட்டும். அதனால்தான், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சுவாரசியத்தில் மயங்கிப் போய் லட்சக் கணக்கானோர் படையெடுத்து வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள கோட்டோவியத்தில் மரங்களும் புதர்களும் நிறைந்திருக்கிறது. அவற்றுக்கு இடையே மனித முகங்களும் இருக்கிறது. மோலோட்டமாகப் பார்த்தால் 4-5 முகங்கள் மட்டுமே தெரியும். ஆனால், இன்னும் நிறைய முகங்கள் மறைந்திருக்கிறது. 10 நொடிகளில் மொத்தம் எத்தனை முகங்கள் இருக்கிறது என்று சரியாக கண்டுபிடித்து சொன்னால், ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நீங்கதான் கெத்து பாஸ். ஏனென்றால், அவ்வளவு எளிதில் எல்லா முகங்களையும் கண்டுபிடித்துவிட முடியாது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தப் படம், ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு சரியான உதாரணம் என்று கூறலாம். இந்தப் படத்தை கவனமாகப் பார்த்து, மறைந்திருக்கும் முகங்களை 10 நொடிகளில் கண்டுபிடித்து சொல்லுங்கள் என்ற சவாலை ஏற்று நிறைய பேர் தேடினார்கள். ஆனால், 1% பேர்தான் எல்லா முகங்களையும் கண்டுபிடித்துள்ளார்கள். அதனால்தான், இந்த படத்தில் உள்ள மொத்த முகங்களையும் சரியாகக் கண்டுபிடித்து சொன்னால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க கெத்து பாஸ் என்கிறோம்.
இந்நேரம் நீங்கள் உங்கள் கூர்மையான பார்வையின் மூலம் இந்த படத்தில் உள்ள அனைத்து முகங்களையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 10 நொடிகளுக்குள் மனித முகங்களை கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கதான் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள். அதற்குமுன் மொத்தம் எத்தனை முகங்கள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த படத்தில் மொத்தம் 9 முகங்கள் இருக்கிறது.
ஒருவேளை, உங்களால் 9 முகங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய 9 முகங்களும் எங்கே இருக்கிறது என்று காட்டுகிறோம்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் அந்த சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக சிறுத்தையைக் கண்டுபிடித்து வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.