scorecardresearch

ஒரு கடினமான சவால்… இந்த டி-சர்டில் எத்தனை ஓட்டைகள் இருக்கு சரியா சொல்லுங்க

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் பார்க்க எளிமையாக இருக்கலாம். ஆனால், கடினமானது. இந்த டி-சர்ட்டில் மேலோட்டமான பார்வைக்கு 2 ஓட்டைகள் தெரியலாம். ஆனால், 17% பார்வையாளர்கள் மட்டுமே சரியாக கண்டுபிடித்திருக்கிறார்கள். நீங்கள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

Optical Illusion, optical illusion image, ஆப்டிகல் இல்யூஷன், இந்த சட்டையில் எத்தனை ஓட்டைகள் இருக்கு கண்டுபிடிங்க, வைரல், How Many Holes Are In The T-shirt, Illusion, Brain Teaser, Bright Side, Visual Illusions, Puzzle, Riddle

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் வைரலாகும் காலம் இது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனதை மருளச் செய்யும் ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து ஆளுமையை வெளிப்படுத்துவதால் நெட்டிசன்களையும் சமூக ஊடக பயனர்களையும் ஈர்த்து வருகிறது. அதே நேரத்தில் எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் ஆளுமையை வெளிப்படுத்துபவை அல்ல என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் பார்க்க எளிமையாக இருக்கலாம். ஆனால், அந்த அளவுக்கு எளிதல்ல. இந்த கிழிந்த சட்டையில் மேலோட்டமான பார்வைக்கு 2 ஓட்டைகள் தெரியலாம். ஆனால், 17% பார்வையாளர்கள் மட்டுமே சரியாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பிரைட் சைட் உருவாக்கிய விளக்கப்படம், இந்த வெள்ளை டி-ஷர்ட்டில் எத்தனை ஓட்டைகள் உள்ளன என்பதைக் கண்டறிய உங்களுக்கு சவால் விடுகிறது. நீங்கள் இந்த சட்டையில் எத்தனை ஓட்டை இருக்கிறது என்று சரியாக கண்டுபிடித்து, கூர்மையான பார்வையுடைய 17% மக்கள் பட்டியலில் சேருங்கள்.

இந்த டி-சர்ட்டில் மேலோட்டமாக பார்க்க 2 ஓட்டைகள் இருப்பது போல தெரியும். ஆனால், நீங்கள் உங்கள் மூளையைப் பயன்படுத்தி கொஞ்சம் யோசித்தால், சட்டையின் ஓட்டையில், அந்தப் பக்கம் தெரிவதால் 2 ஓட்டை அல்ல, மற்றொரு பக்கமும் ஓட்டை இருப்பதை புரிந்துகொள்ள முடியும். அதனால், இந்த சட்டையில் மொத்தம் 4 ஓட்டைகள் இருக்கிறது என்று கூறினால், அதுவும் தவறு.

பின்னர், இந்த அட்டையில் மோத்தம் எத்தனை ஓட்டைகள்தான் இருக்கிறது என்று கேட்டீர்கள் என்றால், டி-சர்டில், கை, தலை, உடல் பகுதி மற்றும் கிழிந்த ஓட்டைகள் என மொத்த 8 ஓட்டைகள் இருக்கிறது என்பதே சரியான பதில். பார்த்தீர்களா, இந்த ஆப்டிகல் இல்யூஷன் பார்ப்பதற்குத்தான் எளிதாகத் தெரியும். ஆனால், கடினமானது. இந்த வீடியோவைப் பார்த்து சரியாக எத்தனை ஓட்டைகள் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you find exactly how many holes are in the t shirt