/tamil-ie/media/media_files/uploads/2022/09/Optical-illusion-Black-Panther.jpg)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டாக மட்டுமல்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டாகவும் பார்க்கப்படுகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த சில மாதங்களாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிக அளவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை பொருட்களைக் கண்டுபிடியுங்கள் என்று ஒரு வகையான ஆப்டிகல் இல்யூஷன் புதிர். மற்றொன்று, இந்த படத்தில் முதல் பார்வையில் உங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை வைத்து ஆளுமையைக் குறிப்பிடும் மற்றொரு வகை ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Optical-illusion-Black-Panther-1.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகான அருவி படத்தில் மறைந்திருக்கும் அபாயகரமான கருஞ்சிறுத்தையை 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்பட்டுள்ளது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் என்றால் புரியவில்லையா? தமிழில் சொல்வதென்றால் ஒளியியல் மாயை என்கிறார்கள். அதாவது, ஒரு காட்சியை பொதுவாக மனிதர்கள் அதன் முழு விவரத்துடன் பார்த்து உணர்வதில்லை. அதில் விவரங்களை, சிறிய பொருட்களை கவனிப்பதில்லை. ஆனால், உற்று நோக்கும்போதுதான் அதை தெரிந்துகொள்கிறார்கள். அந்த வகையில் ஆப்டிகல் இல்யூஷன் ஒரு மாயாஜாலப் புதிர்தான்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/New-Project-2022-09-30T120104.671-2.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் லேட்டஸ்ட் நியூஸ் பிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு அருவியின் படம். இது மிகவும் அழகான இயற்கைச் சூழலைக் காட்டுகிறது. இந்த படத்தில் அழகான அருவி இருந்தாலும் அதே நேரத்தில் அபாயகரமான ஒரு கருஞ்சிறுத்தையும் மறைந்திருக்கிறது. அந்த கருஞ்சிறுத்தையை 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், நீங்கள் சல்லடை போட்டு தேடினாலும் உங்கள் பார்வைக்கு கருஞ்சிறுத்தை சிக்காது. அந்த அளவுக்கு கடினமானது. நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்களேன்.
இந்த படத்தி கருஞ்சிறுத்தையைத் தேடத் தொடங்கியதும் உங்களுக்கு தெரிந்திருகும் ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், தந்திரம், கண்கட்டி வித்தை, ஏமாற்று வேலை என புரிந்துகொண்டிருப்பீர்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகான அருவி அருகே அபாயகரமான கருஞ்சிறுத்தையை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நிஜமாகவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/New-Project-2022-09-30T120104.671-1.jpg)
ஒருவேளை நீங்கள் இன்னும் கருஞ்சிறுத்தையைக் கண்டுபிடிக்கவில்ல என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து பாருங்கள் கருஞ்சிறுத்தையை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கருஞ்சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என கருதுகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். கருஞ்சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/New-Project-2022-09-30T120121.377.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.