இந்த படத்துல என்னென்ன விலங்குகள் இருக்கு… 30 நொடிகளில் சரியாக சொன்னால் நீங்கதான் மாஸ்டர்!
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஓவியத்தில் பல விலங்குகளும் பறவிகளும் மறைந்திருக்கிறது. இதில் என்னென்ன விலங்குகள் பறவைகள் இருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடித்தால் நீங்கள்தான் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர்.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் புதிய உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. மனிதர்களின் பார்வைக் கோணங்களை அடிப்படையாக வைத்து விடப்படும் சவால்கள் ஒவ்வொரு நாளும் புதுமையானதாக இருக்கிறது.
Advertisment
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக் கணக்கில் படையெடுத்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஓவியத்தில் பல விலங்குகளும் பறவிகளும் மறைந்திருக்கிறது. இதில் என்னென்ன விலங்குகள் பறவைகள் இருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடித்தால் நீங்கள்தான் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தை அடிப்படையாகக் கொண்டு படத்தில் இல்யூஷன் செய்து மறைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடிக்க சவால் விடப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது ஒரு தந்திரம். அது ஒரு மாயாஜாலம், அது உங்கள் கன்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, உங்கள் மூளையைக் குழப்பி தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும் சுவாரசியமான புதிர். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் மிகவும் எளிதாக இருக்கும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஓவியத்தில், ஆப்டிகல் இல்யூஷன் அடிப்படையில், மனிதர்களின் முகங்கள், விலங்குகளின் உருவங்கள், பறவைகள், மிருகங்கள், அணிகலன்கள் என பல உருவங்கள் பகுதியாகவும் முழுமையாகவும் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியத்தில் என்னென்ன விலங்குகள், பறவைகள் மறைந்திருக்கிறது என்று 30 நொடிகளில் சரியாக கண்டுபிடித்து கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்து கூறினால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் விலங்குகள் பறவைகளைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
நீங்கள் கண்டுபிடித்த விலங்குகள், பறவைகளின் எண்ணிக்கை சரியானதுதானா என்று சந்தேகம் இருக்கிறதா? கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய என்னென்ன விலங்குகள் மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
இந்த ஓவியத்தில், 1. யானை, 2 புலி, 3. அன்னப்பறவை, 4. பாம்பு, 5. இரட்டைப் புறாக்கள், 6. கொக்கு, 7. ஒரு பெரிய மீன், 8. சிறிய மீன், 9. ஓநாய், 10. பசு, 11. முயல் ஆகிய விலங்குகள், பறவைகள் இருக்கிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"