scorecardresearch

மாயா மாயா எல்லாம் மாயா… இந்த படத்துல எத்தனை புலிகள் இருக்கு? 20 நொடிகளில் கண்டுபிடிச்சா கில்லாடி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், எத்தனை புலிகள் இருக்கிறது என்று 20 நொடிகளுக்குள் சரியாகச் சொன்னால் ஆப்டிகல் இயூஷனில் நீங்கள்தான் கில்லாடி. ஏனென்றால், ஸ்மார்ட்டாக யோசிக்கிறவர்கள்தான் மாயப் புலிகளைக் கண்டுபிடிக்க முடியும்.

மாயா மாயா எல்லாம் மாயா… இந்த படத்துல எத்தனை புலிகள் இருக்கு? 20 நொடிகளில் கண்டுபிடிச்சா கில்லாடி!

Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் என்றாலே ஒரு மாயாஜாலம். மாயா மாயா எல்லாம் மாயா இந்த பாடல் ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கு பொருந்தும். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால், சும்மா சும்மா எல்லாம் சும்மா சும்மாதான்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், எத்தனை புலிகள் இருக்கிறது என்று 20 நொடிகளுக்குள் சரியாகச் சொன்னால் ஆப்டிகல் இயூஷனில் நீங்கள்தான் கில்லாடி. ஏனென்றால், ஸ்மார்ட்டாக யோசிக்கிறவர்கள்தான் மாயப் புலிகளைக் கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் பாடலுக்கு 100 சதவீதம் பொருந்திப் போகிற ஒரு தமிழ் சினிமா பாடல் உண்டு அது என்ன பாடல் தெரியுமா?
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற இந்த பாடல் வரிகள் எம்.ஜி.ஆ நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக கவிஞர் மருதகாசி எழுதியது. உண்மையில் இந்தப் பாடல் வரிகள் எந்த அளவுக்கு வாழ்க்கை தத்துவத்துக்குப் பொருந்திப் போகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷனுக்கு பொருந்திப் போகிறது பாருங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் பிரஷர்ஸ்லைவ் தளத்தி வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இதில் ஒரு வெள்ளைப் புலி இருக்கிறது. ஆனால், இந்த வெள்ளைப் புலியுடன் மேலும் சில புலிகளும் இல்யூஷன் செய்து மறைக்கப்பட்டிருக்கிறது. அதனால், இந்த படத்தில் மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லாடி. ஏனென்றால், இந்த படத்தில் மறைந்திருக்கும் மாயப்ப்புலிகளை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியாது.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் எத்தனைப் புலிகள் இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நிஜமாவே நீங்கள் கில்லாடி. உங்களுக்கு பாராட்டுகள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்ட நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தில் ஒரே புலி மட்டும்தான் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்கிறார்கள். சிலர் மாயப்புலிகளைக் கண்டுபிடித்துவிட்டதாக 2 அல்லது 3 புலிகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். உண்மையில், இந்த படத்தில் எத்தனைப் புலிகள்தான் இருக்கிறது. உங்கள் சந்தேகத்தை தீர்க்க எத்தனைப் புலிகள் இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you find how many tigers hidden in this image within 20 seconds

Best of Express