Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படம் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது முறை உற்றுப் பார்க்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியும். முதல் பார்வையில் தெரியாத விவரங்கள் எல்லாம் மறுபார்வையில் ஆழமாகப் பார்க்கும்போது நிறைய புதியதாக தெரியும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இரண்டு புலிகள் இருக்கிறது. ஆனால், மேலும் சில புலிகள் இருக்கிறது. அதனால், இந்த படத்தில் மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என்று சரியாக சொன்னால் ஆப்டிகல் இல்யூஷனில் சிங்கம் நீங்கதான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொதுவாக மனிதர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை வைத்து ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உருவாக்கப்பட்டு சவால் விடப்படுகிறது.

ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ள இந்த படத்தில் மேலோட்டமகாப் பார்பதற்கு 2 புலிகள் மட்டுமே தெரியும். ஆனால், உற்று கவனித்தால் இந்த படத்தில் மேலும் சில புலிகள் இருப்பது தெரியும். இந்த படத்தில் மொத்தம் எத்தனி புலிகள் இருக்கிறது என்று சரியாக கண்டுபிடித்து சொன்னால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம். ஏனென்றால், எத்தனைப் புலிகள் இருக்கிறது என்று சரியாக கண்டுபிடித்து சொல்வது என்பது அவ்வளவு எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது வேறு ஒன்றுமில்லை. அது ஒரு மாயாஜாலம், அது ஒரு தந்திரம், அது ஒரு கண்கட்டி வித்தை, அது தோற்ற மயக்கம். அது ஒரு திகட்டாத சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு. ஒரு முறை ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துவிட்டீர்கள் என்றால் உங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

இந்த சவாலை ஏற்றுக்கொண்ட நெட்டிசன்கள் சிலர், இந்த படத்தில் மொத்தம் 3 புலிகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சிலர், 4 புலிகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அப்போது, உண்மையில் இந்த படத்தில் எத்தனை புலிகள்தான் இருக்கிறது. நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நிஜமாகவே சிங்கம்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
நீங்கள் கண்டுபிடித்த புலிகளின் எண்ணிக்கை சரியா என்று உறுதிபடுத்திக்கொள்ள, மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். இந்த படத்தில் யானையுடன் மறைந்திருக்கும் விலங்கு குதிரை. ஓவியர் எவ்வளவு நுட்பமாக இல்யூஷன் செய்துள்ளார் பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“