யானை இருக்கு, மான் இருக்கு… 33 நொடிகளில் தவளையைக் கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்
Optical Illusion: இந்த படத்தில் உள்ள காட்டில் பல விலங்குகள் மறைந்திருக்கிறது. அதிகமான விலங்குகளை கண்டுபிடித்தால் நீங்கதான் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களுக்கு விடை காண்பதில் மாஸ்டர்.
Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களுக்கு முதல் பார்வையில் தெரிந்ததைவிட உற்று கவனிக்கும்போது இன்னும் நிறைய உருவங்கள் தெரியும். அதுதான், ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சிறப்பம்சம்.
Advertisment
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இந்த விலங்கை கண்டுபிடிங்க என்று கேள்வி ரொம்ப எளிமையாக இருக்கும். ஆனால், நீங்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்தீர்கள் என்றால், உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ள வேண்டியிருக்கும். முடிவில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் அசந்துபோவீர்கள். இதுதான் ஆப்டிகல் இல்யூஷன் புதிர். அதனால்தான், இணையத்தில் நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் பிரைட் சைட் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் உள்ள காட்டில் பல விலங்குகள் மறைந்திருக்கிறது. அதிகமான விலங்குகளை கண்டுபிடித்தால் நீங்கதான் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களுக்கு விடை காண்பதில் மாஸ்டர்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரிகாகவும் இரண்டாவது பார்வையில் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் நிறைய உருவங்கள் மறைக்கப்பட்டிருப்பது தெரியும். அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு காட்டில் நிறைய விலங்குகள் இருக்கிறது. எல்லா விலங்குகளும் மறைந்திருக்கிறது. மறைந்திருக்கும் விலங்குகளை 33 நொடிகளில் சரியாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு விடப்படும் சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது. இன்னும் சரியாக சொல்வதென்றால், மேகங்களில் தோன்றி மறையும் உருவங்களை சரியாக படம்பிடித்து காட்டுவதைப் போன்றது. அதே மாதிரிதான், இந்த காட்டில் என்னென்ன விலங்குகள் மறைந்திருக்கிறது என்று கண்டுபிடித்து சொல்வது மிகவும் கடினமானது.
என்ன இந்த காட்டில் எந்த விலங்குகளும் உங்களுக்கு தெரியவில்லையா. கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு உதவி செய்ய சில யோசனைகளைக் கூறுகிறோம். அதன்படி முயற்சி செய்யுங்கள். இந்த படத்தை ஜூம் செய்து பாருங்கள். நிறைய விலங்குகள் தெரியும்.
உங்களுக்கு என்னென்ன விலங்குகள் தெரிந்தது என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உண்மையிலேயே இந்த காட்டில் என்னென்ன விலங்குகள் இருக்கிறது என்று சொல்கிறோம். அதிகமான விலங்குகளைக் கண்டுபிடித்திருந்தால், ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களுக்கு விடை தேடுவதில் நீங்கள்தான் மாஸ்டர்.
இந்த படத்தில் உள்ள காட்டில், ஒரு தவளை, யானை, குரங்கு, மான், சிறுத்தை, புலி ஆகியவை மறைந்திருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"