Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அது என்ன தத்துவம் என்றால், பொய்களுக்கு இடையே உண்மையைக் கண்டுபிடிப்பது கடினம். அதே போலத்தான், போலிகளுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பதும் கடினமானதுதான். இதுதான் ஆப்டிகல் இல்யூஷனில் தத்துவம்.
மேகங்களில் தோன்றி மறையும் உருவங்களை அடையாளம் காண்பது போல, ஆப்டிகல் இல்யூஷனிலும் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷனில் ஒரு ஷோ கேஸில், வரிசையாக ஆந்தை பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று மட்டும் உண்மையான ஆந்தை. எது உண்மையான ஆந்தை என்று 5 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு படத்தில் உள்ள விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ள உதவுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது மெலோட்டமாகப் பார்த்தால் சிக்கலாகத்தான் இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் மூளையை குழப்பி, உங்கள் தலைமுடியை பிச்சிக் கொள்ளச் செய்யும் இணையப் பொழுதுபோக்கு புதிர். கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், மிகவும் எளிதான புதிர். நீங்களும் ட்ரைப் பண்ணி பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு ஷோ கேஸில் ஆந்தை பொம்மைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதில் எல்லாமே பொம்மைகள் கிடையாது. ஒன்று மட்டும் உண்மையான ஆந்தை. ஆனால், பொம்மை ஆந்தைகளுக்கும் உண்மையான ஆந்தைக்கும் வித்தியாசமே தெரியவில்லை. அதனால், இந்த படத்தில் உள்ள ஆந்தை பொம்மைகளில் எது உண்மையான ஆந்தை என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், இந்த சவாலில் ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதனால், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் உண்மையான ஆந்தையை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
நீங்கள் இன்னும் உண்மையான ஆந்தையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். உண்மையான ஆந்தையையும் பொம்மை ஆந்தையையும் வெறுபடுத்திக் காட்டுவது அலகும், கண்களும்தான். இப்போது படத்தை நன்றாக உற்றுப் பார்த்து உண்மையான ஆந்தையைக் கண்டுபிடியுங்கள்.
இப்போது உண்மையான ஆந்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. உண்மையான ஆந்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.