இணைதளங்களில் நமக்கு தேவையான பல தகவல்கள் வந்து கிடைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் பல பதிவுகள் பதிவிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆப்டிக்கல் இல்யூஷன் போன்ற படங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் யோசிக்க வைக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.
Advertisment
இந்த மாதிரியான ஆப்டிக்கல் இல்யூஷன் வகை படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும் இவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர்களிடத்தில் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் உள்ளனது. அந்த வகையில் தற்போது பனி மலையில் ஒளிந்திருக்கும் பனிச்சிறுத்தையை கண்டுபிடிக்கும் படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் பனிச்சிறுத்தையை கண்டுபிடிக்கும் சவாலை பலரும் ஏற்று வருகின்றனர். ஆனால் இந்த முயற்சியில் பலரும் தோல்வியடைந்துவிட்டனர். சில புதிர்களை நீங்கள் தீர்க்க சில வினாடிகள் ஆகலாம், சில மர்மஙகளை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு பெரிய சவால் இருககலாம். அந்த வைகயில் பனிமலைகளில் மறைந்திருக்கும் பனிச்சிறுத்தையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று முயற்சித்து பாருங்கள்.
இந்தப் படம் முழுவதுமாக பனியால் மூடப்பட்ட நிலப்பகுதியைக் வெளிப்படுத்துகிறது. அதே சமயம் பனிகளுக்கு இடையில் ஒரு பனிச்சிறுத்தை மறைந்துள்ளது, இப்போது சிறுத்தையை கண்டுபிடிப்பதே நமக்கு சவாலாக உள்ளது. பெரும்பாலான மக்கள் இந்த படத்திற்குள் மறைந்திருக்கும் பனிச்சிறுத்தையை அடையாளம் காண முடியவில்லை. இருப்பினும், சிலரால் படத்தில் பனிச்சிறுத்தையை விரைவாகக் கண்டுபிடிக்க முடிந்தது.
மற்றவர்கள் பனிச்சிறுத்தை மறைந்திருக்கும் இடத்தை கண்டுபிடிக்க தவறிவிட்டனர். உங்களால் முடிந்தால் விலங்கைக் கண்டுபிடிக்க முடியுமா என்பதைப் பார்க்க, படத்தை உன்னிப்பாகப் பாருங்கள். படத்தின் மையத்தில் பனிச்சிறுத்தை காணப்படலாம். அங்கு பனிச்சிறுத்தை நடமாடுவதைக் காணலாம்.
உங்களால் முடியாவிட்டால், கவலைப்பட வேண்டாம், கீழே உள்ள படத்தை பார்த்துதெரிந்துகொள்ளுங்கள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.