/indian-express-tamil/media/media_files/2025/07/10/buffallo-1-2025-07-10-17-00-46.jpg)
காட்டில் மேயும் எருமையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (Image Source: Reddit)
Optical Illusion Game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்களின் பார்வைத் திறனையும், கவனக் குவிப்பையும் சோதிக்கும் சுவாரசியமான விளையாட்டுகள். இந்த மாயத் தோற்றப் புதிர்கள் உங்கள் கண்களையும் மூளையையும் ஒருங்கிணைந்து செயல்படச் செய்து, உங்களை ஒரு புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கும். இது ஒருமுறை விளையாடத் தொடங்கினால், விடவே மனது வராது!
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/10/buffallo-1-2025-07-10-17-00-46.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் சவாலில், காட்டுப் பகுதியில் மேய்ந்துகொண்டிருக்கும் எருமையை 5 வினாடிகளில் சரியாகக் கண்டுபிடித்துவிட்டால், ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் கில்லி என்பதில் சந்தேகமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறும் கண்கட்டு வித்தை அல்ல; அது நமது மூளை தகவல்களை எப்படிப் புரிந்துகொள்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு சுவாரசியமான விஞ்ஞான நிகழ்வு. நாம் பார்க்கும் ஒரு படத்தை மூளை உடனடியாக பகுப்பாய்வு செய்து ஒரு வடிவத்தையோ, பொருளை உருவாக்குகிறது. ஆனால் சில சமயங்களில், படங்களின் வடிவமைப்பு, வண்ணம் அல்லது கோணங்கள் மூளையைத் தவறாக வழிநடத்தி, நிஜத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும், அல்லது இருக்கும் ஒன்றை மறைத்துவிடும். இந்தக் கண்கவர் மாயத்தோற்றங்கள், நமது பார்வைத் திறனையும், கவனத்தையும் சோதிப்பதோடு, மூளையின் பகுப்பாய்வு திறன்களுக்கு ஒரு சவாலையும் விடுக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புதிரை விடுவிக்கும்போது, நம்முடைய புலன் உணர்வுகளுக்கும், மூளையின் கற்பனை சக்திக்கும் இடையே நிகழும் இந்த வியப்பூட்டும் விளையாட்டைப் புரிந்துகொள்ள முடியும். இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, நமது மூளையின் அசாத்தியமான செயல்பாடுகளை அறிய உதவும் ஒரு கருவியும்கூட!
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/10/buffalo-2-2025-07-10-17-03-10.jpeg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் மேயும் எருமையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிசா நீங்கடான் கில்லி.
நீங்கள் இந்நேரம் இந்த விலங்கைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உண்மையிலேயே கில்லிதான்! உங்களுக்குப் பாராட்டுகள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/10/buffalo-2-2025-07-10-17-03-10.jpeg)
ஆனால், சிலர் இந்தப் படத்தில் எருமை இல்லை என்று உறுதியாகக் கூறுகிறார்கள். அதே சமயம், புத்திசாலித்தனமான பலர் எருமையைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
அந்த எருமை எங்கே இருக்கிறது என்று இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். அங்கே அந்த எருமை இருப்பதை நீங்கள் காணலாம்.
இப்போது நீங்கள் காட்டில் மேயும் எருமையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை, எருமை எங்கே இருக்கிறது என்பதை வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/10/buffalo-3-2025-07-10-17-04-15.jpeg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறும் இணையப் பொழுதுபோக்கு புதிர்களாக மட்டுமல்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் சிறந்த விளையாட்டுகளாகும். தொடர்ந்து இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்துப் பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.