Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் சுவாரசியத்துக்கும் த்ரில்லிங்குக்கும் பஞ்சம் இல்லாத ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் என்றால் அது மிகையல்ல. அதனால்தான், லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இந்த படத்துல எந்த வீட்டில் பூனை இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் பிஸ்தா. இது மிகவும் கடினமான சவால். நீங்கள் பிஸ்தா என்பதைக் காட்டுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் அழைப்பு விடப்படும் சவால்கள், மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்ற பார்வைக்க்கோணத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டு கேட்கப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நேற்று இன்று உருவானது அல்ல. கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைய கிரேக்கர்களின் காலத்தில் ஆப்டிகல் இல்யூஷன் இருந்ததாக தொல்லியல் ஆதராரங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். கி.மு 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில், ஆப்டிகல் இல்யூஷன் காட்சியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள் பலவற்றை நாம்ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்த்து புரிந்துகொள்ளலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ட்விட்டரில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் ஏராளமான வீடுகள் இருக்கிறது. இந்த வீடுகளில் ஒரு வீட்டில் ஒரு பூனை இருக்கிறது. அந்த பூனை எந்த வீட்டில் இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் உண்மையிலேயே நீங்கள்தான் பிஸ்தான். ஏனென்றால், இந்த சவால் மிகவும் கடினமானது.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் எந்த வீட்டில் பூனை மறைந்திருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே பிஸ்தா தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் அந்த பூனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த பூனை எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் மேல் வீடுகளில் கவனமாகப் பாருங்கள். பூனை தென்படலாம்.
இப்போது அந்த பூனையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த பூனையை அடையாளம் காண முடியவில்லை என்றால் பூனை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.