Advertisment

பறவைகளுக்கு இடையே மறைந்திருக்கும் டான்சரைக் கண்டுபிடிங்க… உங்க கூர்மையான பார்வைக்கு சவால்

Optical Illusion: இந்த படத்தில் ‘பிங்க்’ நிற ஃபிளெமிங்கோ பறவைகளுக்கு இடையே, மறைந்திருக்கும் டான்சர் பெண்ணைக் கண்டுபிடிங்கள். இதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், பறவைகளுக்கு இடையே மறைந்திருக்கும் டான்சரைக் கண்டுபிடிங்க, உங்க கூர்மையான பார்வைக்கு சவால், Can you find the hidden dancer in this image, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical Illusion game: சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒவ்வொரு நாளும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான பொழுது போக்கு புதிராக இணையத்தில் நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி பின்னர் தெளிவை அளித்து முடிவில் ஆச்சரியத்தை அளிப்பவை.

publive-image

இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிங்க, பறவைகளைக் கண்டுபிடிங்க, இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்குகளை கண்டுபிடிங்க என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த வரிசையில், பிங்க் நிற ஃபிளெமிங்கோ பறவைகளுக்கு இடையே, மறைந்திருக்கும் டான்சர் பெண்ணைக் கண்டுபிங்கள் என்ற படம் வைரலாகி வருகிறது. உங்கள் கூர்மையான பார்வைக்கு ஒரு சவால், ஃபிளெமிங்கோ பறவைகளுக்கு இடையே மறைந்திருக்கும் டான்சர் பெண்ணை கண்டுபிடிங்க.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பண்டைய கிரேக்கர்களின் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் பற்றி கிமு 350 இல் கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் குறிப்பிட்டுள்ளார். “நமது புலன்களை நம்பலாம், ஆனால் அவற்றை எளிதாக ஏமாற்றலாம்.” என்று கூறினார். அப்படி அவர் எதைப் பார்த்து கூறினார் தெரியுமா?

ஒரு நீர்வீழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே அருகே நிலையாக நிற்கும் பாறைகளை நோக்கி பார்வையைத் திருப்பினால், பாறைகள் தண்ணீரீன் ஓட்டத்திற்கு எதிர் திசையில் நகர்வதைப் பார்த்துதான் அரிஸ்டாட்டில் கூறினார். இந்த வகை விளைவு இயக்க பின்விளைவு அல்லது நீர்வீழ்ச்சி மாயை என்று அழைக்கப்படுகிறது.

‘பிங்க்’ நிற ஃபிளெமிங்கோ பறவைகள் ஐரோப்பாவில் அதிகம் காணப்படும் அழகான பறவை இனம். இந்த படத்தில் கண்ணைக் கவரும் வகையில், கூட்டமாக இருக்கும் ‘பிங்க்’ நிற ஃபிளெமிங்கோ பறவைகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ‘பிங்க்’ நிற டான்சர் பெண்ணைக் கண்டுபிடிங்க என்பதுதான் உங்களுக்கான சவால்.

இவ்வளவு பெரிய ‘பிங்க்’ நிற ஃபிளெமிங்கோ பறவைகள் கூட்டத்தில் எப்படி அதே நிறத்தில் டான்சர் பெண்ணைக் கண்டுபிடிப்பது என்று மலைத்துப் போகாதீர்கள். கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவ இதோ ஒரு குறிப்பு தருகிறோம்.

டான்சர் பெண் இந்த படத்தில் இடது பக்கம் கீழ் பகுதியில் இருக்கிறார். இப்போது கண்டுபிடித்துவீட்டீர்களா, இல்லையென்றால் சரியான விடையை இங்கே தருகிறோம்.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment