Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. கணினியில் நாள் முழுவதும் வேலை செய்பவர்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போய் இருக்கும்போது, ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை ஏற்று ரிலாக்ஸ் செய்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைத் தேடிக் கண்டுபிடிக்கும்போது, உற்சாகம் அடைந்து புத்துணர்ச்சி பெறுகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் பதுங்கியிருக்கும் பனிச் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. இது உங்கள் தேடும் திறனுக்கான சோதனை.
ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் ஒருவகையில் கண்ணாமூச்சி விளையாட்டு. கண்ணாமூச்சியில் நீங்கள் கண்களை மூடிக் கொண்டு தேட வேண்டும். ஆனால், இதில், கண்களைத் திறந்துகொண்டு தேட வேண்டும் அவ்வளவுதான். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொதுவாக மனிதர்களின் பார்வைக் கோணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. சிலரின் பார்வை முதலில் வலது பக்கம் கூர்மையாக இருக்கும். இடப் பக்கம் அந்த அளவுக்கு கூர்மையாக இருக்காது. அதே போல, சிலரின் பார்வை இடப் பக்கம் கூர்மையாக இருக்கும். வலது பக்கம் கூர்மையாக இருக்காது. இது அவர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒரு தோற்ற மயக்கம், காட்சிப்பிழை, தந்திரம் என்றெல்லாம் சொல்கிறோம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் Neerav Singh & Vidhi Mehta படம்பிடிக்கப்பட்டது. இந்த படம் pc_zone89 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு மலைப் பகுதியில் பாறைகள் நிறைந்த இடத்தில் ஒரு பனிச் சிறுத்தை பதுங்கி இருகிறது அந்த பனிச் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பனிச் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் பனிச் சிறுத்தை இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கூர்மையான பருந்துப் பார்வை உடையவர்கள் பனிச் சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் இந்த படத்தில் பனிச் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பனிச் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பனிச் சிறுத்தை பட்டென சிக்கலாம்.
இப்போது நீங்கள் மிக எளிதாக பனிச் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பனிச் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.