Advertisment

பனி சூழ்ந்த மலையில் பதுங்கி இருக்கும் சிங்கம்… 20 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கிங்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனி சூழ்ந்த மலையில், பதுங்கியிருக்கும் மலைச் சிங்கத்தை 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், சிங்கம், பாம்பு, ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலை ஏற்று ஒருமுறை மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்கு பிறகு, ஆப்டிகல் இல்யூஷன் விளையாடுவதை யாராலும் தடுக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் சவால் சுவாரசியமானது. அதனால்தான், நெட்டிசன்கள் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்கலைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனி சூழ்ந்த மலையில், பதுங்கியிருக்கும் மலைச் சிங்கத்தை 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங்.

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது”
என்ற பாடல் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக கவிஞர் மருதகாசி எழுதியது. இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கும் பொருந்தும். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், மேஜி, மாயாஜாலம், கண்கட்டி வித்தை ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மறைந்திருக்கும் விலங்குகளை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு பனி சூழ்ந்த மலைப் பிரதேசம் காணப்படுகிறது. இதில் ஒரு ஓய்வெடுக்கும் இடமும் உள்ளது. அதே நேரத்தில், இந்த படத்தில் உள்ள மலையில் ஒரு மலைச் சிங்கம் பதுங்கி இருக்கிறது. அந்த மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என்று 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மலையில் மறைந்திருக்கும் மலைச் சிங்கத்தைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் கிங். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் மறைந்திருக்கும் மலைச் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் இடது மூலையில் கவனமாகப் பாருங்கள்.

இப்போது மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம் மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment