Advertisment

நாய்களில் மறைந்திருக்கும் பாண்டா… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெத்து பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் டால்மேஷன் நாய்களில் ஒரு பாண்டா கரடி மறைந்திருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாவே நீங்க கெத்து பாஸ். ஏனென்றால், அந்த அளவுக்கு கடினமானது.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் சவால் மிகவும் சுவாரசியமானது. “கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது

Advertisment

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்” கவிஞர் மருதகாசி எழுதிய எம்.ஜி.ஆர் படப் பாடல் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களுக்கும் பொருந்தும்.

publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் டால்மேஷன் நாய்களில் ஒரு பாண்டா கரடி மறைந்திருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாவே நீங்க கெத்து பாஸ். ஏனென்றால், அந்த அளவுக்கு கடினமானது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று வெறித்தனமாக விடை கண்டுபிடித்து வருகிறார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவிதமான தந்திரமாக உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் மறைந்துள்ள ஒரு குறிப்பிட்ட விலங்கை கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தால், அந்த படத்தின் முதல் தோற்றம் விடை வேறு எங்கேயோ மறைந்திருக்கிறது என்று நினைக்க வைக்கும். ஆனால் விடை நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தந்திரமானவை என்கிறார்கள்.

publive-image

Infobae வெளியிட்டுள்ள இந்த படத்தில் 5 டால்மேஷன் நாய்கள் இருக்கிறது. இவற்றில் ஏதோ ஒரு நாயின் உடலில் பாண்டா கரடி மறைந்திருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். அப்படி கண்டுபிடித்துவிட்டால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் கெத்து பாஸ். ஏனென்றால், இந்த சவால் மிகவும் கடினமானது. நீங்கள் பாண்டாவைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கு பயிற்சி தருகிற விளையாட்டாகவும் இருக்கிறது.

இந்நேரம், நீங்கள் டால்மேஷன் நாய்களில் மறைந்திருக்கும் பாண்டா கரடியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாவே நீங்கள் கெத்துதான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை, நீங்கள் பாண்டாவைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைபட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். நிஜமான பாண்டா கரடி இல்லை. ஆனால், டால்மேஷன் நாய்களின் உடலில் உள்ள கருப்பு புள்ளிகளில் பாண்டாவின் தோற்றம் இருக்கிறது. இப்போது பாண்டாவை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். மீண்டும் ஒருமுறை படத்தை நன்றாக உற்றுப் பார்த்து தேடுங்கள்.

இப்போதும் உங்களால் பாண்டாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்காக டால்மேஷன் நாய்களின் உடலில் பாண்டா எங்கே மறைந்திருக்கிறது என்பதை வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று விளையாடுங்கள். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment