Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள், வெறித்தனமாக விடையைத் தேடுகிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பசும் புல்களுக்கு இடையே மறைந்திருக்கும் கண்கொத்தி பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. ஆனால், இது மிகவும் கடினமானது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் முதல் பார்வையில் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என்பது போல இருக்கும் ஆனால், தேடத் தொடங்கினால், தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அந்த அளவுக்கு மிகவும் சவாலாக இருக்கும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் Bored Panda தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பசுமையான புல்களுக்கு இடையே ஒரு பச்சை நிற கண்கொத்தி பாம்பு மறைந்திருக்கிறது. அந்த கண்கொத்தி பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே பலே கில்லாடிதான். ஏனென்றால், இந்த சவால் மிகவும் கடினமானது. கண்கொத்தி பாம்பை கழுகு போல பார்த்தால்தான் கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லத் தரப்பு நெட்டிசன்களும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை விரும்பி ஏற்றுக்கொண்டு மறைந்திருக்கும் விலங்கைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.
இந்நேரம், நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் கண்கொத்தி பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷனில் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் இந்த படத்தில் புல்களுக்கு இடையே மறைந்திருக்கும் கண்கொத்தி பாம்பை கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தின் மையப் பகுதியில் கழுகுப் போல கூர்மையாக கவனமாகப் பாருங்கள். கண்கொத்தி பாம்பை கண்டுபிடியுங்கள்.
நீங்கள் இன்னும் மறைந்திருக்கும் பச்சை நிற கண்கொத்தி பாம்பை கண்டுபிடிக்கவில்லை என்றால், அந்த பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“