Optical illusion game: பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்கை கண்டுபிடியுங்கள் என்று விடுக்கப்படும் சவால்களை ஏற்று விடையைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தேடுகிற கதைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால், பளபளக்கும் போலி கண்ணாடி வைரக் கற்களுக்கு மத்தியில் உண்மையான வைரக் கல்லைக் கண்டுபிடிப்பது போன்றது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகள் மற்றும் சருகுகள் இடையே சத்தமில்லாமல் மறைந்திருக்கும் பாம்பை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் சவால் மிகவும் சுவாரசியமானது.
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்” கவிஞர் மருதகாசி எழுதிய எம்.ஜி.ஆர் படப் பாடல் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களுக்கும் பொருந்தும்.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுது போக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகள் மற்றும் சருகுகள் இடையே சத்தமில்லாமல் மறைந்திருக்கும் பாம்பை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று வெறித்தனமாக விடை கண்டுபிடித்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவிதமான தந்திரமாக உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் மறைந்துள்ள ஒரு குறிப்பிட்ட விலங்கை கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தால், அந்த படத்தின் முதல் தோற்றம் விடை வேறு எங்கேயோ மறைந்திருக்கிறது என்று நினைக்க வைக்கும். ஆனால் விடை நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தந்திரமானவை என்கிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கு பயிற்சி தருகிற விளையாட்டாகவும் இருக்கிறது.
இந்நேரம், நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாவே நீங்கள் கெத்துதான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, நீங்கள் பாம்பைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைபட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். மீண்டும் ஒருமுறை படத்தை நன்றாக உற்றுப் பார்த்து தேடுங்கள்.
இப்போதும் உங்களால் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்காக பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்பதை வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று விளையாடுங்கள். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.