Can You Find the Predatory Tiger Preying on These Zebras
ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. சில நம் உணர்வை சோதிக்கின்றன.
Advertisment
அதிலும் சில படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும், உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாவும் தெரியக்கூடியவை. அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது. இது தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இந்த படத்தில் மறைந்திருக்கும் வேட்டையாடும் புலியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் பலரும் இந்த சவாலை ஏற்று வருகின்றனர். இந்த படத்தில், நாம் வரிக்குதிரைகளின் கூட்டத்தை காணலாம். ஆனால், இதில் வேட்டையாடும் புலி ஒன்றும் மறைந்துள்ளது. இந்த படத்தில் மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால்.
சிலர் மறைந்திருந்த வேட்டையாடும் புலியை உடனே கண்டுபிடிக்க, பலரால் முடியவில்லை.
கீழே உள்ள படத்தை பாருங்கள்
உங்களால் புலியை கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லையெனில் உங்களுக்கு ஒரு உதவு ஒரு குறிப்பு கொடுக்கிறோம். படத்தின் வலது பக்கத்தில், புல் புதரில் மறைந்திருக்கும் வேட்டையாடும் புலியைக் காணலாம். இப்போது மேலே உள்ள படத்தை மீண்டும் உன்னிப்பாகப் பாருங்கள்
என்ன புலியை கண்டுபிடித்தீர்களா? முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், கீழே உள்ள படத்தை பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“