scorecardresearch

நாய்க் குட்டிகளுக்கு இடையே 3 பிரட் துண்டுகள்… 30 நொடிகளில் கண்டுபிடிக்க ஓபன் சேலஞ்ச்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கூட்டமாக இருக்கும் நாய்க்குட்டிகளுக்கு இடையே நாய்களின் உடலின் நிறத்தில் 3 பிரட் துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரட் துண்டுகள் எங்கே இருக்கிறது என்று 30 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்பட்டுள்ளது.

நாய்க் குட்டிகளுக்கு இடையே 3 பிரட் துண்டுகள்… 30 நொடிகளில் கண்டுபிடிக்க ஓபன் சேலஞ்ச்!

Optical illusion game: இந்த படத்துல நாய்க்குட்டிகளுக்கு இடையே 3 பிரட் துண்டுகள் மறைந்திருக்கிறது. அதை 30 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஒரு உலக அளவில் ஓபன் சேலஞ்ச் விடப்பட்டுள்ளது. பிரட் துண்டுகள் எங்கே இருக்கிறது என கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடிப்பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால், மனிதர்கள் பொதுவாக எப்படி ஒரு காட்சியை, படத்தைப் பார்த்து உணர்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்ப, ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய விலங்குகள் இல்யூஷன் செய்து மறைத்து வைக்கப்பட்டு சவால் விடப்படுகிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், நாய்க்குட்டிகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நாய்க்குட்டிகளுக்கு இடையே நாய்களின் உடலின் நிறத்தில் உள்ள 3 பிரட் துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரட் துண்டுகள் எங்கே இருக்கிறது என்று 30 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்பட்டுள்ளது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடையைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தேடுகிற கதைதான். ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் கண்களை ஏமாற்றி உங்கள் மூளையைக் குழப்பி தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்கிற த்ரில்லிங் விளையாட்டு. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், வெறுமனே ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி தருகிற விளையாட்டாகவும் இருக்கிறது.

இந்த படத்தை ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்துள்ளார். இதில், நிறைய நாய்க்குட்டிகள் நிறைந்து காணப்படுகிறது. ஒரு மூதாட்டி ஒரு நாய்க்குட்டியைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறார். அதே நேரத்தில், இந்த நாய்க்குட்டிகளுக்கு இடையே, 3 பிரட் துண்டுகளை மறைத்து வைத்து அவை எங்கே இருக்கிறது என கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார். அதிலும் 30 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்பட்டுள்ளது.

நாய்க் குட்டிகள் கூட்டமாக இருப்பதால், அவற்றின் உடலின் நிறத்தில் பிரட்களும் இருப்பதால், நெட்டிசன்கள் விடையைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். சிலர் தில் பிரட் துண்டுகள் இல்லை என்று கூறியுள்ளனர்.

நீங்கள் இந்த படத்தில் 3 பிரட் துண்டுகள் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருந்தால், உங்களுக்கு பாரட்டுகள். ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பிரட் துண்டுகள் எங்கே இருக்கிறது என்று காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you find three breads among the corgis an universal open challenge