scorecardresearch

இவ்ளோ மக்களுக்கு மத்தியில் ஒரு செல்லப் பிராணி… 20 செகண்ட்ல கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கை 20 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion
Optical illusion- Can you see a cat in the picture

ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை.  சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. சில நம் உணர்வை சோதிக்கின்றன,

அதிலும் விலங்குகளைப் பற்றிய ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி வருகிறது. இந்த படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும், உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாவும் தெரியக்கூடியவை.

அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது.

கீழே உள்ள படத்தை பாருங்கள்! இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கை 20 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா?

இந்த படத்தில் உள்ள ஏராளமான மனித முகங்களுக்கு மத்தியில் ஒரு தன்னந்தனி பூனை உள்ளது. ஆனால் அதை கண்டுபிடிப்பது எளிதல்ல. மறைந்திருக்கும் பூனை, படத்தில் இருக்கும் மனித முகங்களுடன் நன்றாகப் பொருந்துவதால், அதைக் கண்டறிவது மிகவும் கடினம்.

இந்த படத்தில் நிறைய மகிழ்ச்சியான முகங்கள் உள்ளன. மேலும் வண்ணங்கள் மிகவும் ஒத்திருப்பதால், பார்ப்பதற்கு எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கிறது,

எனவே பூனையைப் பார்ப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

குறிப்பு வேண்டுமா? நீங்கள் ஒரு ஜின்ஞ்சர் டாம் பூனையை தேடிக்கொண்டிருந்தால்-உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை, இதில் உரோமம் கொண்ட பூனை சாம்பல் நிறத்தில், மனித முகங்களுடன் கலந்திருக்கிறது.

இந்த சவால் பார்வையாளர்களை முற்றிலும் திகைக்க வைத்துள்ளது.

எனவே, நீங்கள் 20 வினாடிகளுக்குள் பூனையைக் கண்டுபிடிக்க முடிந்தால், நீங்கள் கொஞ்சம் புத்திசாலி.

நீங்கள் இன்னும் பூனையைக் கண்டுபிடிக்க சிரமப்படுகிறீர்கள் என்றால், படத்தின் கீழ் இடது பகுதியில் பாருங்கள்.

உங்களால் பார்க்க முடிகிறதா?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you see a cat in the picture