ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன.
அதிலும் விலங்குகளைப் பற்றிய ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி வருகிறது.
அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது.
இந்த படத்தில் மறைந்திருக்கும் பச்சோந்தியைக் கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவாலாகும், அதை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? உங்களின் கவனிப்பு திறமைக்கு இது ஒரு சிறந்த சோதனையாக இருக்கும்.
உயிரியல் மாணவர் சாம் ரவுலி (20) மடகாஸ்கர் தீவில், இதனை படம் பிடித்தார். அழகான இந்தப் படத்தில், அடர்த்தியான பசுமையான மரங்களை நாம் காணலாம். ஆனால் இந்த படத்தில் ஒரு பச்சோந்தியும் மறைந்துள்ளது.
கீழே உள்ள படத்தைப் பாருங்கள்

பச்சோந்தியை பார்த்து விட்டீர்களா? இல்லையா?
கவலைப்பட வேண்டாம், படத்தில் மறைந்திருக்கும் பச்சோந்தியை அடையாளம் காண உதவும் சில குறிப்புகளை கீழே உள்ளன.
குறிப்பு 1: அது உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பு 2: படத்தை மேலிருந்து கீழாகப் பார்க்க முயற்சிக்கவும். நீங்கள் பச்சோந்தியை அடையாளம் காண முடியும்.
உங்களில் பெரும்பாலோர் இந்த படத்தை இப்போது வெற்றிகரமாக தீர்த்திருக்கலாம். இந்த படத்தில் பச்சோந்தியைக் கண்டுபிடிக்க முடிந்தவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களிடம் சிறந்த கவனிப்பு திறன் உள்ளது.
பச்சோந்தியைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள், சோர்ந்து போகாதீர்கள்; பதிலுக்கு கீழே பார்க்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“