/tamil-ie/media/media_files/uploads/2022/08/Optical-illusion-find-tiger-4.jpg)
Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றி முடிவில்லா குழப்பத்தில் ஆழ்த்தும். முடிவில் விடை தெரியும்போது உங்களை திகைக்க வைக்கும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதல் பார்வையில் ஒரு காட்டில் 4 புலிகள் இருப்பதாகத் தெரியும். ஆனால், உற்று கவனித்தால் பல புலிகள் இருப்பது தெரியவரும். அப்படி இந்த படத்தில் மொத்தம் 16 புலிகள் இருக்கிறது. அதை 36 நொடிகளில் கண்டுபிடித்தால் பெரிய சாதனைதான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். உற்று கவனித்தால் பல உருவங்கள் இல்யூஷன் செய்யப்பட்டு மறைந்திருப்பது புரியும். இதுதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் காட்டும் மேஜிக்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/New-Project-2022-08-11T090859.848-1.jpg)
இந்த படம் டிக்டாக் பயனர் ஹெக்டிக் நிக் பகிர்ந்ததையடுத்து வைரலாகி வருகிறது. இந்த படத்தில் வெளிப்படையாக 4 புலிகள் மட்டுமே தெரியும். ஆனால், உற்று கவனித்தால் இன்னும் பல புலிகள் இருப்பது தெரியவரும். அப்படி, இந்த படத்தில் மொத்தம் 16 புலிகள் மறைந்திருக்கிறது. எல்லா புலிகளையும் 36 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள 16 புலிகளையும் 36 நொடிகளில் கண்டுபிடித்தால் பெரிய சாதனைதான். ஏனென்றால், இந்த புதிர் அவ்வளவு எளிதானது அல்ல. மிகவும் கடினமாக இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Optical-illusion-find-tiger-4-1.jpg)
சில நெட்டிசன்கள் புலிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து தங்களால் 8 புலிகளைத்தான் கண்டுபிடிக்க முடிந்தது. மீதி புலிகள் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். ஒரு நெட்டிசன் “நான் 15 புலிகளைக் கண்டுபிடித்துவிட்டேன். ஆனால், அந்த 1 புலி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
ஆனால், நீங்கள் இந்த படத்தில் 16 புலிகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தியிருந்தால் பாராட்டுகள். மொத்த புலிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய 16 புலிகளையும் வட்டமிட்டு காட்டுகிறோம். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/find-tigers.jpg)
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.